TNPSC Group 4 Result 2023 Stenotypist Issues
TNPSC Group 4 Result 2023 Stenotypist Issues அரசு வேலை பெற வேண்டும் என்பதை கனவாக கொண்டவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 10,117 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ஒரே மையத்திலிருந்து 600க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
குரூப் 4ல் அடங்கிய காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு: கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும், பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன
ஸ்டெனோ டைப்பிஸ்ட் எனும் தட்டச்சு தேர்வில்
இந்நிலையில், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளில் மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் எனும் தட்டச்சு தேர்வில் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 450 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் தட்டச்சு பிரிவுக்கு 2,500 இடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 600 பேர் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதில், 450 பேர் சங்கரன்கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர். அந்த 450 பேரும் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.