தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023 Tamilnadu Anganwadi Jobs 2023

Tamilnadu Anganwadi Jobs 2023

1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில்  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 

இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940  குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம்  54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.

ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்துள்ளார்.

Tamilnadu Anganwadi Jobs 2023
Tamilnadu Anganwadi Jobs 2023

English Summary

In 1975, on Mahatma Gandhi’s 106th birthday, the Integrated Child Development Program was launched across India. Children up to 6 years of age, adult women, pregnant women and lactating mothers are benefited under this scheme.

Anganwadi Centers are the focal point of this scheme. Under this scheme in Tamilnadu only. A total of 54,439 centers are functioning including 49,499 Primary Anganwadi Centers and 4940 Minor Anganwadi Centers. At the national level, this number is 13.9 lakh.

Each Anganwadi Center has been entrusted with two posts namely Anganwadi Worker and Anganwadi Assistant. Only one Anganwadi worker is appointed for small Anganwadi center where the number of beneficiaries is below 150-300.

In this case, Union Women and Child Development Minister Smriti Irani has responded to a question raised in the Lok Sabha regarding vacancies in Anganwadi centers.

Tamilnadu Anganwadi Vellaivaipu 2023 Vacancies

அங்கன்வாடி பணியிடங்கள்

இதில் 18,000க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கல்வித் தகுதி

இந்த பணிகளில் சேர D.Ted படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணியிடங்களை விரைவில் நிரப்பக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் கோடை விடுமுறை விட வேண்டும் என அந்த போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்பக் கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை தேவை. மேலும் இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு , நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, இறுதி தகுதி பட்டியல் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

வயது தகுதி

மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 45 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் https://icds.tn.nic.in/ என்ற அதிகாரபூர்வ தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியில் சேர்ந்தால் மாதம் ரூ. 6500 முதல் பணிக்கு தகுந்தாற் போல சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Website & Application Link 

Click  here

2 thoughts on “தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023 Tamilnadu Anganwadi Jobs 2023”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!