TN Girl Child Protection Scheme
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்குழந்தைகளும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறும்பொருட்டு முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
புதுமைப்பெண் திட்டம்
பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகை வழங்கப்படும். மாணவிகள் இதற்காக எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் இதற்கான தொகை செலுத்தப்படும். ‘புதுமைப்பெண் திட்டம்’ என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேறு திட்டம்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்குழந்தைகளும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறும்பொருட்டு முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
அதில், தமிழ்நாடு சமூகநலன் மற்றம் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சார்பாக நடத்தப்பட்ட காணொலி ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளிடமிருந்து அதிகமாக புதிய விண்ணப்பங்கள் பெற முடிவு எடுக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து, 2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை முழுமையாக செலவினம் மேற்கொள்ளவும், ஏற்கனவே இத்திட்டத்தில் அசல் வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது முதிர்வடைந்தவர்களை கண்டுபிடிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து, 2021 – 2022 ஆம் நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை முழுமையாக செலவினம் மேற்கொள்ளவும், ஏற்கனவே இத்திட்டத்தில் அசல் வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது முதிர்வடைந்தவர்களை கண்டுபிடிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது மேலும் உரிய ஆவணங்களுடன் கருத்துரு பெற்று, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலமாக முதிர்வுத் தொகையினை அவர்கள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் தமிழ்நாடு உள்ள அனைத்து பெண்குழந்தைகள் குறைந்தபட்ச கல்வித் தகுதியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறும்பொருட்டு முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
முக்கிய குறிப்பு :
1) ஒரு பெண்குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மும், இரண்டு பெண்குழந்தைகள் தலா ரூ.25,000/-மும் 18 வயது பூர்த்தியடைந்த பிறகு முதிர்வுத் தொகை மற்றும் வட்டித்தொகையுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படும். 2) இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் இருந்தால் தற்போது முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 3) குழந்தைகளின் தாயார் 35 வயதிற்குள் குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். 4) வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 5) இருப்பிடச் சான்று மற்றும் ஆண்வாரிசு இல்லை என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகளுடன் தகுதியான அனைத்து பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏற்கனவே முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து, வைப்புநிதிப் பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/மண்டல அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவு அலுவலர்/மகளிர் ஊர்நல அலுவலர்களிடம் வழங்க வேண்டும். 1) வைப்புநிதிப் பத்திரம் அசல்/நகல். 2) பயனாளியின் கடவுச்சீட்டு (Passport) அளவு புகைப்படம். 3) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் 4) பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
Latest Government Jobs 2023 – Click here to apply.