puthumai penn thittam apply online
puthumai penn thittam apply online தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இதில் சுமார் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள். மாணவிகள் ஒவ்வொரு மாதம் 7ம் தேதி ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது
இதற்கான, விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
puthumai penn thittam apply online
Scheme Name | Puthumai Penn Scheme |
Scholarship Amount | Rs. 1,000 per amount |
State | Tamilnadu |
Application Starting Date | 01.11.2022 |
Last Date | 11.11.2022 |
official Website | puthumaipenn.tn.gov.in |
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) எமிஸ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.
puthumai penn thittam apply online Scheme
- பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
- குழந்தை திருமணத்தை தடுத்தல்
- குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்
- பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
- உயர் கல்வியினால் பெண்களின் திறமைமைய ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்
- உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்
- பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
- இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்
Puthumai Pen Thittam 2022 Eligibility
- மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வராக இருக்க வேண்டும்.
- தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்
- அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
- மாணவிகள் 8 (அ) 10 (அ),12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். (சான்றிதழ் Certificate course), பட்டயம் (Diploma/IT, D.Ted,,Courses) இளங்கலை பட்டம் (Bachelors’ Degree) (B.A, B.Sc, B.Com, BBA, BCA and All Arts and Science, Fine Arts Course) தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech, MBBS, B.D.S, B,Sc (agri), B.V.Sc, B.Fsc, B.L etc) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy, etc போன்றவை)
- தொலைத்தூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
- 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,
- தொழிற்கல்வியை பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
- 2021-2022ஆம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலை படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
- இத்திட்டத்தன் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.
Puthumai Penn Thittam 2022 Help line Number
இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்த தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்கள் 9150056809,9150056805, 9150056801 மற்றும் 9150056610 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’.
இவ்வாறு சென்னை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
puthumai penn thittam apply online
இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும் இளங்கலை / தொழிற்கல்வி / மருத்து கல்வியில் இரண்டாம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்ட https://www.puthumaipenn.tn.gov.in/ வழியாக தங்கள் விண்ணப்பம் பெறப்படும்.
Steps to Register in Pen Kalvi Scheme
Step 1: Go to https://www.puthumaipenn.tn.gov.in/
Step 2 : Enter Your Mobile NumerStep
3 : Enter OTP
Step 4: Enter the Govt School name and Location
Step 5: Enter Your NAME, Aadhar Number, Bank Account Details
Step 6: Submit
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |
Last Date for puthumai penn thittam 2022
puthumai penn thittam apply onine Registration link
https://www.puthumaipenn.tn.gov.in