ITBP Recruitment 2023
மத்திய அரசு வேலைவாய்ப்பு – கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி – சம்பளம் – ரூ 69,100 வரை
இந்தோ – திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police) உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
கான்ஸ்டபிள் பணிக்கான அறிவிப்பு
மொத்த பணியிடங்கள்: 125
ஆண்கள் – 114
பெண்கள் -11
ஊதிய விவரம்:
கான்ஸ்டபிள் பணிக்கு 7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ. 69,100 வரை வழங்கப்பட உள்ளது

கல்வித் தகுதி:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருப்பது சிறப்பு.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.in – என்ற லிங்க் மூலம் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவென்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://drive.google.com/file/d/1p3Jhmxid78_q_s89QOf6EIM5MwIjUqRn/view – கிளிக் செய்து காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/1p3Jhmxid78_q_s89QOf6EIM5MwIjUqRn/view – என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2023
முகவரி:
Block 02,
CGO Complex,
Lodhi Road,
New Delhi-110003
தொடர்புக்கு – 011 – 24369482 / 24369483
![[இன்று இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்] தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு கல்வித் தகுதி 10th, 12th, I.T.I, Diploma, Degree | TNHRCE Palani Murugan Kovil Recruitment 2023 Last Date TNHRCE Palani Murugan Kovil Recruitment 2023 Last Date](https://tnstudycorner.in/wp-content/uploads/2023/04/TNHRCE-Palani-Murugan-Kovil-Recruitment-2023-Last-Date.png)




