10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், 3,359 அரசுப் பணி இடங்களுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? TNUSRB PC Recruitment 2023

10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல் படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனினும்  இணையவழி விண்ணப்பம்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஊதிய விகிதம்‌
இதில் தேர்வாகும் தேர்வர்களுக்கு ஊதியம் ரூ.18,200 முதல் 67,100 வரை அரசால் வழங்கப்படும்.
இணைய வழி விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 18.08.2023 (இன்று)
இணைய வழி வண்ணப்பம்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.09.2023
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மொத்த காலிப் பணியிடங்கள்‌: 3,359
TNUSRB PC Recruitment 2023
TNUSRB PC Recruitment 2023
காவல்துறை
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ மாவட்ட / மாநகர ஆயுதப்படை
ஆண்கள் – 0
பெண்கள் – 780
மொத்தம் – 780
இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை) 
ஆண்கள் – 1,819
பெண்கள் – 0
மொத்தம் – 1,819
சிறை மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறை 
இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌
ஆண்கள் – 83
பெண்கள் – 3
மொத்தம் – 86
தீயணைப்பு மற்றும்‌ மீட்புப் பணிகள்‌ துறை
தீயணைப்பாளர்‌ 
ஆண்கள் –  674
பெண்கள் – 0
மொத்தம் –  674
மொத்தம்‌:
ஆண்கள் – 2576
பெண்கள் –  783
மொத்தம்‌- 3359
ஒதுக்கீடுகள்‌:
மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டவர்களுக்கு 10%, சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%, முன்னாள்‌ இராணுவத்தினருக்கு 5% மற்றும்‌ ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்‌.
வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
தற்போதுள்ள அரசு விதிகளின்‌படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்‌.
கல்வித்‌ தகுதி :
குறைந்தபட்சம்‌ பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.
வயது வரம்பு (01.07.2023-ன்‌ படி):
குறைந்தபட்சம்‌ 18 வருடங்கள்‌, அதிகபட்சம்‌ 26 வருடங்கள்‌ (வயது உச்ச வரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)

தேர்வு முறை எப்படி?

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

* எழுத்துத் தேர்வு- 70 மதிப்பெண்கள்  (தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பிறகே எழுத்துத் தேர்வு நடைபெறும்.)
* உடல் தகுதித் தேர்வு- 24 மதிப்பெண்கள்
* சிறப்புத் தேர்வு – 6 மதிப்பெண்கள்

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?

தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 தொகையைச் செலுத்த வேண்டும்.  எஸ்பிஐ வங்கி இ- சலானாகவோ ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.

மேலே குறிப்பிட்ட விவரங்களை விரிவாக அறிய: https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

பாடத்திட்டங்களுக்கான இணைப்பு

இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை), இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான நேரடி தேர்வு பாடத்திட்டங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdfஎன்ற இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!