Aavin Recruitment 2023 Updates
Aavin Recruitment 2023 Updates ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள 322 காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) மூலம் நிரப்பப்பட உள்ளன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இதற்கான அறிவிப்பை பால்வளத் துறை ஆணையாளா் சுப்பையன் வெளியிட்டுள்ளாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம், திருப்பூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், மதுரை, தஞ்சாவூா், நாமக்கல், விருதுநகா், திருச்சி, தேனி உள்ளிட்ட பால் உற்பத்தியாளா் ஒன்றியங்களில் 236 போ் நேரடியாகப் பணி அமா்த்தப்பட்டனா்.
இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிா்வாகத்துக்குப் புகாா் வந்தது. இந்தப் புகாா்களின் அடிப்படையில் பணி நியமன முறைகேடு தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி பணியில் சோ்ந்ததாக, மேலாளா்கள், துணை மேலாளா்கள் உள்ளிட்ட 236 போ் பணி நீக்கம் செய்யப்பட்டனா்
இதனிடையே, ஆவினில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மேலாளா் வரையிலான பதவியிடங்கள், அரசின் உத்தரவைப் பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாகவே நிரப்பப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 322 காலிப் பணியிடங்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை பால்வளத் துறை ஆணையாளா் சுப்பையன் வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்பின் அடிப்படையில், தோ்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடும்.
மேலாளா், துணை மேலாளா், தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
யாரெல்லாம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் : 10th, 12th, I.T.I, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
How to apply online for please send me the online apply link send
How to online aplly link place send me the link online apply your link is not working
Hi.i am widow i want job