உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு போன் யூஸர்கள் அனைவருக்கும் செர்ட் என அழைக்கப்படும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மிகவும் சீரியஸான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் இதனால் ஹேக்கர்கள் மிக எளிதாக ஆண்ட்ராய்டு போனை ஹேக் செய்து பயனர்களின் தகவல்களை திருட வாய்ப்புள்ளதாகவும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது
ஆண்ட்ராய்டு போன்களில் இவ்வளவு நாட்கள் கண்டறியப்படாமல் இருந்த சில குறிப்பிட்ட பாதுகாப்பு குறைபாடுகளை அந்தக் குழுவானது கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இருப்பதாகவும், ஹேக்கர்கள் நினைத்தால் மிக எளிதாக அந்த பாதுகாப்பு ஓட்டைகளை கண்டறிந்து யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விட முடியும் என்றும் செர்ட் எச்சரித்துள்ளது.
குறிப்பாக லேட்டஸ்டாக வெளிவந்துள்ள ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் மட்டுமின்றி பல்வேறு வெர்ஷன்களிலும் இந்த பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சேர்த்து சுட்டிக்காட்டி உள்ளது. ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L மற்றும் 13 ஆகிய வெர்ஷன்களில் இந்த பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் காணப்படுவதாகவும், யூசர்கள் அவ்வப்போது அளிக்கப்படும் அப்டேட்களை முறையாக இன்ஸ்டால் செய்து வருவதன் மூலம் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் சில குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் தான் 95 சதவீத ஸ்மார்ட்போன் யூசர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இந்த பாதுகாப்பு குறைபாடு இந்தியாவில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கலாம் என தெரியவந்துள்ளது..
செர்ட் ஏஜென்சியின் அறிக்கைப்படி ஹேக்கர்கள் ஆண்ட்ராய்டு யூஸர்களின் போனை ஹேக் செய்யும் பட்சத்தில், கீழ்கண்ட செயல்களை அவர்களால் செய்ய முடியும்.
- யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள், அக்கவுண்ட் பாஸ்வேர்டுகள், போட்டோக்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை திருட முடியும்
- டிவைசை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்
- ஆபத்தான ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்ய முடியும்.
இந்த பாதுகாப்பு குறைபாட்டை பற்றி ஏஜென்சி ஆனது கூகுள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை அளித்துள்ளது. கூகுள் நிறுவனமும் மேலே குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை சரி செய்வதற்கான தீர்வை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீங்களும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துபவராக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள் போனை அப்டேட் செய்து கொள்ளலாம்.
- உங்கள் ஆண்ட்ராய்டு போனில் Settings ஆப்ஷனுக்கு செல்லவும்.
- ஸ்க்ரோல்டவுன் செய்து Software Update என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- Check Update என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- இப்போது வரை நீங்கள் அப்டேட் இன்ஸ்டால் செய்யவில்லை எனில், பாப் அப் பாக்ஸ் உங்களது திரையில் தோன்றும்.
- அப்டேட் என்பதை கொடுத்து அப்டேட் முழுவதுமாக முடிந்தபின் டிவைஸை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் புதிய அப்டேட் உங்களது ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்படும்.