முருங்கை கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Murungai keerai health benefits in tamil

Murungai keerai health benefits in tamil

Join our Daily Health Tips Whatsapp Group – Click here

ஒரு சில தாவரங்களின் ஒரு சில பகுதிகள் மட்டுமே மனிதர்கள் உணவாக பயன்படுத்த தக்கதாக இருக்கின்றன. மற்ற சில தாவரங்களில் அதன் காய், இலைகள், பிசின், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கின்றன. அத்தகைய ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை மரம் இருக்கிறது. அந்த முருங்கை மரத்தின் இலைகள் முருங்கை கீரை என அழைக்கப்படுகின்றன. இந்த முருங்கை இலைகள் அல்லது முருங்கைக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முருங்கை கீரை நன்மைகள்

மலச்சிக்கல்

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

உடல் மற்றும் கை, கால் வலிகள்

உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.

மலட்டுத்தன்மை

எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் குழந்தை பிறப்பதில் தடையேதும் இருக்காது. தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.

Murungai keerai health benefits in tamil
Murungai keerai health benefits in tamil

ரத்த சோகை

ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது. பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.

பற்களின் உறுதி, வாய்ப்புண்

நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.

இரும்புச்சத்து

நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தலைமுடி

நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும், உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது அவசியம். முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், புரத சத்துகள் அதிகம் உள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

தோல் வியாதிகள்

உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன. முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.

தாய்ப்பால்

சுரப்பு குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

சுவாச கோளாறுகள்

குளிர்ந்த சீதோஷணம் நிலவும் காலத்திலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.

 

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!