vazhaithandu benefits in tamil
வாழைத்தண்டின் மருத்துவ பயன்கள்..!
vazhaithandu benefits in tamil ஒரு தாவரம் அல்லது செடியின் அடி முதல் நுனி வரை பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு பயன்படுத்தலாம் வாழை மரத்தின் இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம், வாழைக்காய், என இந்த மரம் கொடுக்கக்கூடிய அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
ஒவ்வொரு பகுதியும் பல விதமான ஊட்டச் சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது, அதிலும் முக்கியமாக வாழைத்தண்டு உடலுக்கு பலவித பயன்களை தரக்கூடியது.
பல நபர்கள் இதனுடைய சுவை துவர்ப்பாக இருப்பதால் பெரும்பாலும் உணவில் சேர்த்துக் கொள்ள விரும்புவதில்லை.
ஆனால் இதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் யாரும் சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்.
இந்த பதிவில் வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
உடலிலிருந்து கெட்ட கழிவுகளை வெளியேற்ற
vazhaithandu benefits in tamil உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு வாழைத்தண்டு கூட்டு செய்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கெட்ட நச்சுக்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும், உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறை உங்கள் உணவில் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரத்த சோகை குணமாக
இரும்புச்சத்து உங்கள் உடம்பில் குறைவாக இருக்கும் பொழுது இரத்தத்தின் அளவு குறைந்து இரத்த சோகை ஏற்படும் இது பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்படும்.
எப்படி கீரை, பேரீச்சம் பழத்தில், இரும்புச்சத்து இருக்கிறது, அதே போன்று வாழைத் தண்டில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
மேலும் இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு வாழைத்தண்டு எப்பொழுதும் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் ரத்த சோகை முற்றிலும் குணமாகிவிடும்.
நீரிழிவு நோய்க்கு
இப்பொழுது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை என்றால் அது நீரிழிவு நோய்.
இந்த நோயைத் தடுப்பதற்கு, வாழைத்தண்டு உங்களுக்கு எப்பொழுதும் உதவிகரமாக இருக்கும்.
உங்கள் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க மற்றும் சிறுநீரகம் பாதிப்பு அடையாமல் இருக்க, வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
ஜீரண சக்தியை மேம்படுத்த
vazhaithandu benefits in tamil சில நபர்களுக்கு என்ன மாதிரியான உணவு எடுத்துக் கொண்டாலும் ஜீரணக்கோளாறு இருந்துகொண்டே இருக்கும், அதுபோன்ற நபர்கள் வாழைத்தண்டு பொரியல், கூட்டு அல்லது சாறு எடுத்து சாப்பிட்டால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் உடலில் உள்ள பித்தம், கெட்ட கழிவுகள், வெளியேறும், அதனால் ஜீரண சக்தி பல மடங்கு அதிகரிக்கும் மற்றும் ஜீரண சக்திக்குத் தேவையான அமிலங்கள், சுரந்து,ஜீரண கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
உடல் எடை குறைய
vazhaithandu benefits in tamil உங்களுடைய உடல் எடை அதிகரிப்பதற்கு கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் காரணமாக இருப்பதை போலவே, உடல் பருமனைக் குறைப்பதற்கு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் காரணமாக இருக்கிறது.
வாழைத் தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இது உங்கள் எடையை குறைப்பதற்கு எப்பொழுதும் உதவிகரமாக இருக்கும், எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் வாழைத்தண்டு ஜூஸ் எடுக்கலாம், இது உங்களுடைய தொப்பை குறைப்பதற்கு தீவிரமாக இருக்கும்.
மேலும் இது பசி அதிகரிப்பதை முற்றிலும் கட்டுப்படுத்தும் அதன்மூலம் நீங்கள் கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி மற்றும் சாலையோர விற்கப்படும் உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கப்படலாம்.
சிறுநீரக கற்கள் பிரச்சினை
vazhaithandu benefits in tamil உடலில் சேரும் அதிக அளவு சோடியம் உப்பு மற்றும் பல காரணங்களாலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது அதனை முற்றிலும் சரி செய்வதற்கு வாழைத்தண்டு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
வாழைத்தண்டு சாறு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகத்தின் வழியாக வெளியேறிவிடும்.
வாழைத்தண்டு சாறு குடிக்கும் போது அதில் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும் போது வழி தெரியாமல் இருக்கும்.
Join our Daily Health tips Whatsapp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |