Iron rich fruits in tamil
Iron rich fruits in tamil : உடல் மற்றும் இரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புசத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்பு சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல், போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இரும்புசத்து அதிகம் உள்ள பழங்கள்
இப்பொழுது நாம் இரும்புசத்து அதிகம் உள்ள சில பழவகைகளை பற்றி காண்போம் நண்பர்களே.
1.பேரிச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புசத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது.மேலும் இதில் கால்சியம், ப்ரோடீன், நார்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
2. மாதுளை
மாதுளை இரும்புசத்து நிறைந்த ஒரு சிறந்த பழம் ஆகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது. மேலும் மாதுளைக்கு உடலில் உதிராது பேருக்கும் சக்தி உண்டு. இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின்,பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
3. அத்திப்பழம்
உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தசோகை, மலசிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது. முக்கியமாக ஆண்களுக்கு அத்திப்பழம் மிகவும் நல்லது.அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.எனவே தினமும் இதனை உண்டு பயன் பெறுங்கள் நண்பர்களே.
4. கொய்யாப்பழம்
பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம் ஆகும். நமது ஊர்பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யப்பழம்.இதில் இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, ப்ரோடீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் கொய்யப்பழத்திற்கு இரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உள்ளது.
5.உலர்த்ராட்சை
உலர்த்ராட்சை மற்றும் இதர பழவகைகளில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்த்ராட்சை உண்டு வந்தால் உங்களுக்கு தேவையான அளவு இரும்புசத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவும்.
6. ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புசத்து நிறைந்துள்ளது.மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
7.மாம்பழம்
முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம் ஆகும். இதில் இரும்புசத்து,வைட்டமின் எ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.இதை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் உங்களின் சரும அழகினை மேம்படுத்த உதவும்.
8.தர்பூசணி பழம்
தர்பூசணி பழத்தில் இரும்புசத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புசத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும். எனவே தர்பூசணி பழத்தினை உண்டு வாருங்கள் நண்பர்களே.
Join our Whatsapp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |