தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | அத்திப்பழத்தின் மருத்தவ பயன்கள் | அத்திப்பழத்தின் நன்மைகள் | Athi Pazham Health benefits in tamil

Athi Pazham Health benefits in tamil

அத்திப்பழத்தின் மருத்தவ பயன்கள் | அத்திப்பழத்தின் நன்மைகள்

அத்திப்பழம். அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும்.

அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம். உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

பயன்கள்:
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு
பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

அத்திப்பழங்களை அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது வயிற்று வலியை உண்டாக்கும். அதோடு இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் மிகுந்து இருப்பதால் அதிகமாக எடுக்கும் போது இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்கிவிடும்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதோடு சர்க்கரை மாத்திரைகளோடு அத்தியும் சேர்ந்து எடுத்துகொண்டால் அது வேகமாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க வாய்ப்புள்ளது.

அத்திப்பழங்களில் காணப்படும் இயற்கையான வேதியியல் கலவைகள் ஒவ்வாமையை அதிகரித்துவிடக்கூடும். ஆஸ்துமா போன்று ஒவ்வாமை கொண்டிருப்பவர்களும் அத்திப்பழம் தவிர்ப்பது தான் நல்லது.

அத்திப்பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்டுகள் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது. கால்சியம் குறைபாடு எலும்புகளின் அடர்த்தியை மென்மையாக்க செய்யும். எலும்புகளை சேதப்படுத்தும். எலும்பு பலவீனமாவதோடு பற்களையும் இவை பாதிக்க செய்யும். அதிகமான அத்திப்பழம் உடல் கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துவதால் கால்சியம் குறைபாடு உண்டாக வாய்ப்புண்டு. ஆக்ஸலேட்டுகள் சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களுக்கான முக்கிய காரணியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்ய போகிறவர்கள், செய்து கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது தான் நல்லது. மீண்டும் அத்திப்பழத்தை எடுத்துகொள்வதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கலாம்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!