sundakkai health benefits in tamil 2023
Join Health Tips WhatsApp Group – Click here
சுண்டைக்காயில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்யும்.
ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்
சுண்டைக்காயில் பினைல்கள், குளோரோஜெனின்கள், போன்ற ஆக்சிஜனேற்ற பண்புகள் அதிகமாக இருக்கின்றன.இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி அல்லது கணையத்தில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றைக் குறைத்து வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
அதோடு இவற்றில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் செரிமானத்தை எளிதாக்கி எடையையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.
ரத்த சோகை சரிசெய்யும்
சுண்டைக்காயில் அதிக அளவில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து அனீமியா என்னும் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.ஏற்கனவே ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்து வர ரத்த சோகை நீங்கி ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவி செய்யும்.
நீரிழிவை கட்டுக்குள் வைக்க
கிளைக்கோஸைடு என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் சுண்டைக்காயில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. சுண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது. அதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் பார்த்துக் கொள்ளும். உயர் ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
மாதவிடயை சீர்படுத்தும்
சுண்டைக்காயில் உள்ள சபோஜெனின் என்னும் ஸ்டீராய்டு ஹார்மோன் உற்பத்தியை சீராக்கி உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கும். ஹார்மோன் சமநிலையை சரிசெய்து ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சீர்செய்ய உதவி செய்யும்.
நீர்க்கட்டி, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்படும் சீரற்ற மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்ய உங்களுடைய தினசரி உணவில் சுண்டைக்காயை சீராக எடுத்துக் கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியம்
சுண்டைக்காயில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அமினோ அமிலங்களும் இதில் அதிகம். இதயத் தசைகளைத் தளர்வாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவி செய்கிறது.
இதயத்திசுக்களுக்கு சீராக ஆக்சிஜனையும் ரத்தத்தையும் பம்ப் செய்து எடுத்துச் செல்லும் வேலையை சுண்டைக்காயில் உள்ள அமினோ அமிலங்கள் செய்கின்றன.
இதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கிறது.
காய்ச்சலைக் குணப்படுத்தும்
சுண்டைக்காயில் ஆன்டி வைரல் பண்புகளும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் அதிகம். அதனால் உடலின் வெப்பநிலையைக் குறைத்து உடல் சூட்டைத் தணிக்கும் தன்மை சுண்டைக்காய்க்கு உண்டு.
காய்ச்சல் இருக்கும் சமயத்தில் சுண்டைக்காய் வற்றலை சீரகம், மிளகு, உப்பு சேர்த்து வறுத்துப் பொடி செய்து அதை சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட காய்ச்சல் விரைவில் குணமடையும் அல்லது சுண்டைக்காயை சூப் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீரக செயலிழப்பு
சுண்டைக்காயில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.
சிறுநீரகக் கற்கள் போன்ற சிறுநீரகக் கோளாறுகளைக் குணப்படுத்தவும் சிறுநீரகத்தின் குளோமருலர் கட்டமைப்புகளின் அடைப்பை நீக்கவும் உதவும்.
உங்களுடைய வழக்கமான டயட்டில் வாரத்தில் இரண்டு நாட்கள் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகங்களில் கழிவுகள் தேங்காமல் வெளியேற்றி குடல், சிறுநீர்ப் பாதை மற்றும் ஒட்டுமொத்த சிறுநீரகத்தின் இயக்கத்தையும் மேம்படுத்தும். இதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க
சுண்டைக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
அழற்சி, நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
காய்ச்சல், சளி ஆகியவை ஏற்படும்போது உடல் பலமாக இருக்க சுண்டைக்காயை சூப் வைத்து கூட எடுத்துக் கொள்ளலாம்.
சுண்டைக்காய் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துமா?
ஆம். இருமல், மூச்சுக்குழாய் அடைப்பு, சைனஸ், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைப்பதில் சுண்டைக்காய் முக்கியப் பங்காற்றுகிறது.
அதனால் ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.
சுண்டைக்காயை எப்படி சேமித்து வைக்க வேண்டும்?
சுண்டைக்காயை பச்சையாகவும் பயன்படுத்த முடியும். காயவைத்து வற்றலாகவும் பயன்படுத்தலாம்.
சுண்டைக்காயை நன்கு தட்டி அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெயிலில் நன்கு உலர்த்தி வற்றலாக எடுத்தால் சுண்டைக்காய் வற்றல் தயார்.