Thuthuvalai benefits in tamil
தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் பல மருத்துவப் பயன்கள் கொண்டது.
Thuthuvalai benefits in tamil தூதுவளை பயன்கள்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
ஜலதோஷம்
ஜலதோஷம் உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகின்றன. தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிடுபவர்களுக்கு ஜலதோஷத்தால் ஏற்படும் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும் உடல் வலிமை பெறும்.
காய்ச்சல்
காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவார்கள் தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் இருமல், ஜுரம், காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
சுவாச நோய்கள்
சுவாச நோய்கள் மனிதனின் முறையான சுவாசத்தை பாதிக்கும் நோய்களாக இருப்பது ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்றவை இந்நோய்களை போக்க, இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக தயாரித்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய்கள் நீங்குவதோடு அந்நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாகவும் செயல்படும்.
எலும்புகள் உறுதியாகும்
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பு களையும், பற்களையும் பலமாக்கும். தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து, அதனுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகி இரும்பு போல உறுதியுடன் இருக்கும்.
தைராய்டு கட்டிகள் குணமாகும்
தூதுவளையானது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது. தூதுவளை சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
அஜீரண கோளாறு நீங்கும்
தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த சோகை
உடலில் இருக்கும் ரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரத்த அணுக்கள் அவற்றிற்குண்டான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள் குறையும் பொது ரத்த சோகை ஏற்படுகிறது. இந்நோய் பிரச்சனை தீர தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.
கல்லீரலை சுத்தம் செய்ய குடிக்க வேண்டிய 4 ஜூஸ்கள்- Click here to Read பிளாக் காபி பருகுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் – click here to read
Join our Daily Health tips WhatsApp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |