Juices for healthy liver in tamil
Juices for healthy liver in tamil நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். நச்சு நீக்கம், ஊட்டச்சத்துக்களை ஒழுங்குபடுத்துதல், என்சைம்களை செயல்படுத்துதல் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு கல்லீரல் முக்கிய பணியாற்றுகிறது. மேலும் உடல் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த, கல்லீரல் பித்த சாற்றை சுரக்கிறது.
அதனால்தான் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க நமது கல்லீரலை சரியாக கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். எனவே, நமது உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உண்பது மிகவும் அவசியம்
பீட்ரூட் ஜூஸ்
Juices for healthy liver in tamil பீட்ருட் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று சமையல் செய்வதற்கு தேவைப்படும் காய் என்று. இதனை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மை உள்ளது என்று யோசித்துருப்பீர்கள். இதனை தினமும் உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளது. அது மட்டுமில்லாமல் பீட்ருட்டை ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரலுக்கு நன்மை கிடைக்கும். இந்த ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் வீக்கத்திலிருந்து கல்லீரலை பாதுகாக்கும். இது உடலுக்கு தேவையில்லாத நச்சுத்தன்மைகளை சேரவிடாமல் விரட்டும்.
இலை ஜூஸ்:
Juices for healthy liver in tamil இலை ஜூஸ் என்றால் எதை சாப்பிடவேண்டும் என்று யோசிப்பீர்கள். இலை என்றால் பழங்களில் இலைகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். பழங்கள் நமக்கு எவ்வளவு நன்மைகளை தருகிறதோ அந்த அளவிற்கு நன்மையை தரும். முக்கியமாக பீட்ரூட், ஆப்பிள், வெள்ளரிக்காய், எலுமிச்சை, சில பழங்களில் இலைகளை ஜூஸ் செய்து குடித்தால் கல்லீரல் சுத்தமாகும். அதுமட்டுமில்லாமல் உணவுகளில் கீரை வகைகளை சேர்த்து கொள்ளுங்கள் ஏனென்றால் கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் பைபர் நிறைந்திருக்கும் அதனால் உடலில் ஏற்படும் சர்ம பிரச்சனைலிருந்து பாதுகாக்கும்.
இஞ்சி லெமன் ஜூஸ்:
Juices for healthy liver in tamil அனைவரும் விருப்பி அருந்த கூடியது பிரெஷ் ஆரஞ்சு ஜூஸ் தான். அப்படி குடிக்கும் போது அதில் கொஞ்சம் இஞ்சி சேர்த்து குடிப்பதால் உடலுக்கு நன்மையை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் கல்லீரலை சுத்தம் செய்யும் அதனை பலப்படுத்தவும் உதவும். காய்கறி ஜூஸ் வகைகள்:
அன்றாடம் உணவுகளில் சேர்க்ககூடிய காய்கறிகளை ஜூஸ் செய்து குடிக்கலாம். உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டு தான் வருகிறோம் பிறகு எதற்கு ஜூஸ் குடிக்க வேண்டும் என்று அனைவரும் யோசிக்கலாம். காய்கறி பழங்கள் என்றால் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகளை கொண்டது. அதனால் தான் தினமும் பழங்களில் அல்லது காய்கறிகளில் ஜூஸ் செய்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
நெல்லிக்காய் ஜூஸ்:
நெலலிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காரணிகள் நச்சுகளை வெளியேற்றி நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. நெல்லிக்காய் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளைத் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள. மேலும் ஹைப்பர்லிபிடெமியா (அதிக கொழுப்புகள்) மற்றும் வளர்சிதை மாற்ற நோய் அறிகுறியைத் தணிக்கும்.
நாவல் பழத்தின் ஜூஸ்:
நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகளை நீக்குகிறது. சிறுநீர் பிரச்சனையை சரி செய்கிறது. நாவல் பழத்தின் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் கற்களானது கரைந்துவிடும். நாவல் பழம் நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
இந்த பானங்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கவும். ஆனால் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், மிதமானது முக்கியமானது. இந்த உணவுகளை எடுத்தக்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Join our Daily Health tips WhatsApp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |