peerkangai benefits in tamil
பீர்க்கங்காயில் உள்ள மருத்துவ பயன்கள்
peerkangai benefits in tamil நீர்க்காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காய் இந்தியா முழுவதும் கிடைக்கிற காய்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து இருக்கிறது. சுரைக்காய், புடலங்காய் போன்ற கொடி வகைகளில் ஒன்றான இந்த பீர்க்கங்காய் சாப்பிட மிக சுவையான காய்கறி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கீழ்வரும் நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கும். Join our Whatsapp Group and Telegram Channel
Click here | |
Telegram | Click here |
பீர்க்கங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பீர்க்கங்காயில் தான் எல்லா காய்கறிகளையும் விட அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை,
- புரதம்
- நார்ச்சத்து
- கொழுப்பு
- கார்போஹைட்ரேட்
- கால்சியம்
- மெக்னீசியம்
- பொட்டாசியம்
- தாமிரம்
- இரும்புச்சத்து
- பாஸ்பரஸ்
- தியாமின்
- துத்தநாகம்
- சோடியம்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் கே
- செலினியம்
- வைட்டமின் சி
- கொலஸ்ட்ரால்
- வைட்டமின் பி6
- ரிபோஃப்ளேவின்
- சர்க்கரை
- ஃபோலேட்
- நியாசின்
நீரிழிவை கட்டுப்படுத்தும் பீர்க்கங்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளில் ஒன்றாக பீர்க்கங்காயைக் குறிப்பிடலாம். இதிலுள்ள பெப்டைடுகள் மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
எடையை குறைக்க பீர்க்கங்காய்
உடல் எடை குறைப்பதற்காக டயட்டில் இருப்பவர்களுக்கு பீர்க்கங்காய் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இது கலோரி அளவுகளில் மிகக் குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்து உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவி செய்கிறது. அதனால் உடல் எடையும் வேகமாகக் குறையும்.
இதய ஆரோக்கியத்துக்கு பீர்க்கங்காய்
எல்லா காய்கறிகளிலும் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்து என்பது இருக்கும். ஆனால் பீர்க்கங்காயில் கொழுப்புச் சத்தே கிடையாது. குறிப்பாக கெட்டது செய்யும் கொலஸ்டிரால் இதில் இல்லவே இல்லை. அதனால் உணவில் இந்த பீர்க்கங்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகிறது.
ஜீரண சக்தி அதிகரிக்கும் பீர்க்கங்காய்
பீர்க்கங்காயில் நார்சு்சத்துக்கள் மிக மிக அதிகம். அவை மலச்சிக்கலைத் தடுப்பதோடு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேலையைச் செய்கிறது. அதோடு இதில் கொழுப்புச்சத்தும் இல்லை என்பதால் மற்ற காய்கறிகளை விட மிக எளிதாக ஜீரணமடையும் தன்மை கொண்டது.
அழற்சியை தடுக்கும் பீர்க்கங்காய்
பீர்க்கங்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அதனால் பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சருமத்தில் ஏற்படும் அழற்சி, தோல் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். ஏற்கனவே அழற்சி இருந்தால் அவற்றைத் தணிக்கவும் உதவும்
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீர்க்கங்காய்
வலி நிவாரணியாக செயல்படும் பீர்க்கங்காய்
பீர்க்கங்காயில் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. அதனால் அடிக்கடி பீர்க்கங்காயை உங்களுடைய டயட்டில் சேர்த்துக் கொண்டால் ஒவ்வாமைகளால் ஏற்படும் வலிகளைப் போக்கி மிகச்சிறந்த வலி நிவாரணியகச் செயல்படும். அதோடு மிகச்சிறந்த வலி நிராண மூலப்பொருள்களான பிளோலிக் அமிலம் மற்றும் ஃபிளவனாய்டுகள் இந்த பீர்க்கங்காயில் மிக அதிகமாக இருப்பதால் இயற்கையான வலி நிவாரணியாக இது செயல்படுகிறது.இரும்புசத்து அதிகம் உள்ள பழங்கள் – Click here