suriya gandhi vithai benefits in tamil
சூரிய காந்தி விதையின் மருத்துவ பயன்கள்
இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே பயன் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. சூரியகாந்தி விதைகளில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் துத்தநாக சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பயன்படுகிறது. இந்த பாஸ்பரஸ் சத்து இதய தசைகளை சுருக்கவும், சிறுநீரக செயல்களை சீராக்கவும் பயன்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய்யில் உள்ள விட்டமின் ஈ இதயம், வாஸ்குலார், மூளை மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. சூரிய காந்தி விதைகள் நமது சருமம் வயதாகுவதை தாமதப்படுத்துகிறது. இப்படி ஏராளமான நன்மைகள் தரும் சூரியகாந்தி விதைகளை பற்றி இப்பகுதியில் காணலாம்.
சூர்யகாந்தி விதை நன்மைகள் :
சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக ஆவுகளில் தெரியவந்துள்ளது.
மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும் , ஆற்றல் அளவை அதிகரிக்கக்கூடியதுமான பல அத்தியாவிஷய ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளது.
சூர்யகாந்தி விதை நன்மைகள் பின்வருமாறு
இதய ஆரோக்கியம் :
சூரியகாந்தி விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன.
சூரிய காந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி3 மொத்த கொழுப்பின் அளவையும் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
மேலும் சூரிய காந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி5 நல்ல HDL கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் மொத்த சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
சூர்யகாந்தி விதைகளை சாப்பிடுவது இதய நோய், அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
நோய் எதிர்ப்பு :
சூர்யகாந்தி விதைகள் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்.
அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கின்றன.
மேலும் இவற்றில் துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகிய இரண்டு தாதுக்களும் உள்ளன.
அவை உடலின் நோயெதிர்ப்பு செல்களை பராமரிக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும் உடலுக்கு சக்தி அளிக்கிறது.
சிறந்த ஆற்றல் மூலம் :
சூர்யகாந்தி விதைகளில் புரதம் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் பி மற்றும் செலினியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.
சூர்யகாந்தி விதைகளில் உள்ள வைட்டமின் பி1 உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
இதில் உள்ள செலினியம் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு அதிக ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்கிறது :
சூர்யகாந்தி விதைகளில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது.
மேலும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. அவை இரத்த அழுத்தம் மற்றும் சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன.
உடல் எடை :
சூரிய காந்தி விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை இரண்டும் சேர்ந்து பசியைக் குறைத்து நீண்ட நேரம் நிறைவாக உணரவைக்கிறது.
இதன் மூலம் உணவைகளால் அதிக கலோரிகள் உடலில் சேர்வதன் மூலம் உடல் எடை கூடுவது தவிர்க்கப்படுகிறது.
புற்றுநோய் :
சூரிய காந்தி விதையில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டெரால் என்ற பைட்டோஸ்டெரால் சேர்மம் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
மேலும் சூரிய காந்தி விதைகளில் வலுவான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
தோல் ஆரோக்கியம் :
சூரிய காந்தி விதைகளின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாடுகள் நோய்த் தொற்றுகளைத் தடுக்கிறது, இதனால் நமது சருமம் தெளிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சூர்ய காந்தி விதைகளில் உள்ள ஒலிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உருவாவதற்கு உதவுகின்றன.
காயம் குணப்படுத்துவதை துரிதப் படுத்துகின்றன. மேலும் வடுக்கள் உருவாவதையும் தடுக்கின்றன.
சூர்யகாந்தி விதை தீமைகள் :
அதிகப்படியான சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது வாந்தி, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அரிதாக சிலருக்கு சூரியகாந்தி விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வாந்தி, சொறி, சுவாசப் பிரச்சனை, வீக்கம் மற்றும் வாயைச் சுற்றி அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
சூர்ய காந்தி விதைகளில் கலோரிகள் அதிகம். எனவே தொடர்ந்து அதிக அளவில் உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
சூர்ய காந்தி விதைகளில் காட்மியம் உள்ளது. அதிகப்படியான விதைகளை தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சுத்தமற்ற முளைத்த விதைகளை சாப்பிடுவது சால்மோனெல்லா போன்ற பாக்டீரியா தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.