Athiyaman TNPSC Group 4 2022 Answer key
Athiyaman TNPSC Group 4 2022 Answer key : தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான (TNPSC Group 4) விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட அரசுப்பணிகள் குரூப் 4 தேர்வின் கீழ் வருகின்றன.
இந்த முறை தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 28-ம்தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஜூலை24-ம் தேதி ஒரே கட்டமாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகியுள்ளன (TNPSC Group 4 2022 Latest Update)
இத்தேர்வு ஜூலை 24, 2022 அன்று நடைப்பெற்றது.
தமிழ் பகுதி வினாக்கள் எப்போதும் போல் கேட்கப்பட்ட நிலையில், பொது அறிவு மற்றும் கணித பகுதி வினாக்கள் தேர்வர்களுக்கு சற்று கடினமாக இருந்தது. காரணம் இந்தப் பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையை நன்கு புரிந்து படித்தவர்களால் மட்டுமே விடையளிக்க முடியும் வகையில் இருந்தது, என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் ஆனது, முந்தைய ஆண்டுகளை விட குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த குரூப் 4 தேர்வு எளிமையாக இருந்தது. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை தேர்வில் விடையளிப்பதில் தேர்வர்களுக்கு சற்று தடுமாற்றம் இருந்தது. எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம்.
இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.
அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.
அதியமான் கோச்சிங் சென்டர் தற்போது TNPSC Group 4 2022 Answer Key வெளியிட்டு உள்ளது
Athiyaman TNPSC Group 4 2022 Answer key link
Click here to Download Athiyaman TNPSC Group 4 2022 Answer Key
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Click here | |
Telegram | Click here |