Big Boss Tamil Season 6 contestants 2022
Big Boss Tamil Season 6 contestants 2022: ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமானதை போன்றே தமிழிலும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பாவது பிக்பாஸ் நிகழ்ச்சி. பல ஊடகங்களுக்கும், யூடியூபர்களுக்கும், மீமர்களுக்கும் கன்டென்ட் கொடுக்கும் தெய்வமாக இந்த நிகழ்ச்சி விளங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த இந்நிகழ்ச்சியின் 5 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னராகவும், இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வின்னராகவும், மூன்றாவது சீசனில் முகின் ராவ் டைட்டில் வின்னராகவும், நான்காவது சீசனில் ஆரி டைட்டில் வின்னராகவும், ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார்கள். மற்ற மொழிகளை போலவே தமிழிலும் இந்நிகழ்ச்சிக்கு டிஆர்பி வேற லெவலில் உள்ளது. வழக்கம்போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Big Boss Tamil Season 6 contestants 2022
Name of the Show | Big Boss |
Language | Tamil |
Host Channel | Star Vijay |
Host App | Disney Hot Star |
Date of Starting | 9.10.2022 @ 6 pm |
ஆறாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியான ப்ரோமோவில் வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி மாலை 6 மணியளவில் பிக்பாஸ்-6 தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து சீசன்களை காட்டிலும் ஆறாவது சீசனுக்கு வெளியான ப்ரோமோ நன்கு திகிலூட்டும் வகையில் அமைந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இன்னும் சில தினங்களில் சமூக வலைத்தளங்களை பிக்பாஸ்-6 நிகழ்ச்சி ஆக்கிரமித்துவிடும், ரசிகர்களும் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கிவிடுவார்கள்.
Big Boss Tamil Season 6 contestants 2022
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக திவ்யதர்ஷினி, மோனிகா ரிச்சர்ட், ராஜலக்ஷ்மி செந்தில், ஷில்பா மஞ்சுநாத், ரோஷினி ஹரிப்ரியன், தர்ஷா குப்தா, அஷ்வின் குமார், எம்.எஸ்.பாஸ்கர், ரவீந்தர் சந்திரசேகரன், மகாலக்ஷ்மி, மற்றும் மனிஷா யாதவ் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அக்டோபர்-9ம் தேதி பார்த்தால் தான் இதில் யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பது தெரியும். மேலும் பிக்பாஸின் இந்த ஆறாவது சீசனில் முதன்முறையாக பிரபலங்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இணையுங்கள் எங்களின் Tech தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! 👑 #BiggBossTamil6 – அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/ULgfT5J0XW
— Vijay Television (@vijaytelevision) September 27, 2022
தமிழக ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு