CMDA Recruitment 2023
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலைவாய்ப்பு
சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் (சிஎம்டிஏ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்பது வரைவு திட்டம் செய்தல், விரிவான கட்டமைப்பு திட்டம் உள்ளிட்டவற்றுக்கு, புதிய நகர்களை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் சிஎம்டிஏவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்:
- சிஎம்டிஏவில் மொத்தம் 13 பிரிவுகளுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- ப்ரோக்கூர்மென்ட் எக்பர்ட், கிளைமேட் அன்ட் என்விரான்மென்ட் எக்ஸ்பர்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட், அர்பன் எக்கனாமிஸ்ட், கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட், ஹெரிடேஜ் கன்சர்வேஷன் எக்ஸ்பெர்ட், சோசியலாஜிஸ்ட் அன்ட் ஜென்டர் எக்ஸ்பர்ட், ப்ரோக்கூர்மென்ட் அனலிஸ்ட், கிளைமேட் அன்ட் என்விரான்மென்டல் அனலிஸ்ட், பைனான்சியல் அசோசியேட், ஜிஐஎஸ் அனலிஸ்ட், அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- பிளானிங் அனலிஸ்ட் பணிக்கு 6 பேர் என மொத்தம் 18 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
CMDA Recruitment 2023 மாத சம்பளம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பணி வாரியாக பார்த்தால் ப்ரோக்கூர்மென்ட் எக்பர்ட், கிளைமேட் அன்ட் என்விரான்மென்ட் எக்ஸ்பர்ட், பைனான்சியல் மேனேஜ்மென்ட் எக்ஸ்பர்ட், அர்பன் எக்கனாமிஸ்ட், கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட், ஹெரிடேஜ் கன்சர்வேஷன் எக்ஸ்பெர்ட், சோசியலாஜிஸ்ட் அன்ட் ஜென்டர் எக்ஸ்பர்ட் வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
ப்ரோக்கூர்மென்ட் அனலிஸ்ட், கிளைமேட் அன்ட் என்விரான்மென்டல் அனலிஸ்ட், பைனான்சியல் அசோசியேட், ஜிஐஎஸ் அனலிஸ்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
பிளானிங் அனலிஸ்ட் பணிக்கு ரூ.60 ஆயிரம், அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி:
டிகிரி, பிஇ, பிடெக், மாஸ்டர் டிகிரி, சிஏ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்கள் 18 மாதம் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்பிறகு 6 மாதங்கள் வரை பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் மாதம் 11ம் தேதி மாலை 3 மணிக்குள் www.cmdachennai.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப படிவங்களை Member Secretary, CMDA, Thalamuthu Natarajan Building, No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai – 600 008, Tamil Nadu, India என்ற முகவரிக்கு பதிவு தபால் அல்லது cmdaprocurement@gmail.com இணையதளம் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.