EPFO SSA Recruitment 2023
EPFO SSA Recruitment 2023 மத்திய அரசின் கீழ் இயங்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ தற்போது எஸ்எஸ்ஏ (SSA) மற்றும் ஸ்டெனோகிராபர் (Steno posts) பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ தளமான epfindia.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 28 ஆகும். மொத்தமுள்ள 2859 காலியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப உள்ளது.
EPFO SSA Recruitment 2023 Vacancies
பணியின் பெயர் | காலிப் பணியிடங்கள் |
சமூக பாதுகாப்பு உதவியாளர் | 2674 |
ஸ்டெனோகிராபர் | 185 |

அவற்றில் 2674 காலியிடங்கள் சமூக பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கும், 185 காலியிடங்கள் ஸ்டெனோகிராபர் (குரூப் சி) பதவிக்கும் உள்ளன. இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். பொது / EWS / OBC ஆகிய இரு பதவிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் 700 ஆகும். SC/ST* PwBD, பெண் வேட்பாளர்கள் அல்லது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
- சமூக பாதுகாப்பு உதவியாளர் (குரூப் சி) பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அதேசமயம், ஸ்டெனோகிராபர் (குரூப் சி) பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
சமூக பாதுகாப்பு உதவியாளர் SSA. Rs. 25,500-81,100/-..
ஸ்டெனோகிராபர் – Rs. 29,200-92,300/
விண்ணப்பக்கட்டணம்
- SC, ST, PWD பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- மேற்குறிப்பிட்ட பிரிவினரை தவிர இதர பிரிவினர் அனைவரும் ரூபாய் 700 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி :
1.www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
2.முகப்புப் பக்கத்தில், ஆட்சேர்ப்பு தகவலை கிளிக் செய்யவும்.
3.அடுத்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
4.தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
5.விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Notification and Application Link
EPFO SSA Official Notification PDF | Click Here |
EPFO Stenographer Official Notification PDF | Click Here |
EPFO Online Application Form | Click Here |