INFLUENZA SCHOOL LEAVE
INFLUENZA SCHOOL LEAVE புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் 26ஆம் தேதி 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி வரை இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவலை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத் துறை 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே தெலங்கானா மாநிலத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்று முதல் அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மாநிலம் முழுவதும் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மழலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நிகழ் கல்வியாண்டின் மீதமுள்ள நாள்களில் காலை 8 மணிமுதல் பகல் 12.30 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழகத்தில் கடந்த 13ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 3ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி தேர்வு முடிவடைகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்வு தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் முடிவடைந்த பின்னர் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, ஏப்ரல் 24 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17ம் தேதியே தேர்வுகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது