PM Kisan 19th installment details in tamil
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களை உயர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சிறந்த முன்முயற்சியான பிரதமரின் விவசாயிகள் நலனுக்கான நிதித் திட்டத்தின் (பிஎம் கிசான்) 6ஆவது ஆண்டில் நாடு முழுவதும் உள்ள வேளாண் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் கணக்குகளில் இதுவரை ரூ. 3.5 லட்சம் சேர்ந்திருப்பது குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், ”பிஎம் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் 6ஆவது ஆண்டு நிறைவில் நாடு முழுவதும் உள்ள நமது வேளாண் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் கணக்குகளில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருப்பது எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிப்பதாக உள்ளது. எங்களின் இந்த முயற்சி விவசாயிகளுக்கு மதிப்பு, வளம், புதிய பலம் ஆகியவற்றை அளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தவணைகளாக

பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படும். 4 மாதங்களுக்கு ஒருமுறை இந்த நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு இந்த தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
பிஎம் கிஸான் திட்டத்தின் 19வது தவணை நிதி எப்போது கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், பீகார் மாநிலம் பாகல்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான பிஎம் கிஸான் திட்டத்தின் நிதியை விடுவித்துள்ளார்.
19ஆவது தவணையின் பயனாளிகளாக பீகாரைச் சேர்ந்த சுமார் 75 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பீகார் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தற்போது சுமார் ரூ. 1,600 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பீகார் மற்றும் நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
E-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2000 வழங்கப்படுகிறது. ஆனால் பல விவசாயிகள் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கூறுவதையும் பார்க்க முடியும். இதற்கு காரணம் E-KYC நிறைவு செய்யாத விவசாயிகளின் கணக்குகளில் பணம் வராது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்து முடிக்கலாம். முக அங்கீகாரம் மூலம் வீட்டிலேயே e-KYC செய்யலாம்.
நீங்கள் பிஎம் கிசான் உதவித்தொகையை பெற E-KYC செய்வது கட்டாயமாகிவிட்டதை அறிந்து கொள்ளுங்கள். முன்னர் பயோமெட்ரிக் அடிப்படையிலான E-KYC செய்ய வேண்டியிருந்தது. இதனால் மக்களுக்கு அலைச்சல் இருந்தது. ஆனால் இப்போது விவசாயிகள் தங்கள் மொபைலில் இருந்தே PM கிசான் யோஜனா செயலியின் உதவியுடன் E-KYC செய்யலாம். இந்த செயலியின் உதவியுடன், விவசாயிகள் OTP அல்லது கைரேகை இல்லாமல் முக அங்கீகார அம்சத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே e KYC-ஐ எளிதாகச் செய்து முடிக்கலாம்.
E-KYC – மிக அவசியம்
பணம் நேரடியாக தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு விவசாயியும் e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது மிக அவசியமாகும். இது இடைத்தரகர்களின் தேவையை நீக்குகிறது. PM கிசான் சம்மன் நிதிக்கான e-KYC -ஐ மூன்று வழிகளில் செய்து முடிக்கலாம்.
- முதலில், உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி போர்டல் அல்லது மொபைல் செயலி வழியாக e-KYC செயல்முறையை நீங்கள் சுயாதீனமாக செய்து முடிக்கலாம்.
- அலது, பயோமெட்ரிக் அடிப்படையிலான e-KYC -க்கு உட்பட பொது சேவை மையத்திற்கு (CSC) செல்லலாம்.
- மூன்றாவதாக, முக அங்கீகாரம் மூலமும் இதை நிறைவு செய்யலாம். இந்த செயல்முறை, உங்கள் மொபைல் சாதனம் அல்லது மடிக்கணினியில் உள்ள கேமரா மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, e-KYC ஐ செய்து முடிக்க உங்களை அனுமதிக்கிறது.
- கூடுதலாக, அருகிலுள்ள CSC மையத்திற்கு சென்றும் e-KYC சேவைகளைப் பெறலாம். அங்கு உங்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய மொபைல் எண்ணை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.