Tamilnadu Budget 2023 in tamil
Tamilnadu Budget 2023 in tamil தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்ற நிலையில் , தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2023- 34ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கு கூட்டம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி, எதிர்கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். பட்ஜெட், மீதான விவாதத்திற்கு பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்து, அறிவிக்கப்படும்.
குடும்பத் தலைவிக்கான மாதம் ரூ.1,000 திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu Budget 2023 in tamil Live Updates
குடும்பத் தலைவிக்கான மாதம் ரூ.1,000 திட்டம்
செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு
ரூ. 434 கோடியில் வெள்ள தடுப்பு பணி – தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீண்ட கால 12 வெள்ள தடுப்பு பணிகள் ரூ. 434 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
கடல் அரிப்பை தடுக்க, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்
பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மாணியத்திற்காக ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு. மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ. 320 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ. 80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்
பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம்.
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி ஒதுக்கீடு. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ. 40 கோடி ஒதுக்கீடு.
வருவாய் பற்றாக்குறையை ரூ. 62,000 கோடியில் இருந்து ரூ. 30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்
இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு .
போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ. 20 லட்சம் நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு .
வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு – நிதியமைச்சர்
வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம். தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்
அம்தேக்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
