அக்டோபர் 1 முதல் 5G சேவை துவக்கம்.. பட்ஜெட் விலையில் உள்ள 5G Smart Phones TOP 5G BUDGET PHONES UNDER RS 15000 Check now

5G BUDGET PHONES UNDER RS 15000

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவார் என தேசிய பிராட்பேண்ட் மிஷன் அறிவித்துள்ளது. அறிமுக தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

நேஷனல் பிராட்பேண்ட் மிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்காக, ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ என்ற ஆசியாவின் மிகப் பெரும் தொழில்நுட்ப மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆப்ரேட்டர்கள் சங்கம் இணைந்து ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ என்ற பெயரில் தொழில்நுட்ப மாநாட்டை 2017-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இவ்வாண்டு வரும் அக்டோபர் 1 முதல் 4 வரையில் டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.

5G BUDGET PHONES UNDER RS 15000
5G BUDGET PHONES UNDER RS 15000

5G BUDGET PHONES UNDER RS 15000

REDMI 11 PRIME 5G:

5G BUDGET PHONES UNDER RS 15000
5G BUDGET PHONES UNDER RS 15000

மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி சிப்செட், இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட், டியூயல் 5ஜி சிம் கார்டு, 6.58 இன்ச் ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, பின் பக்கத்தில் இரண்டு கேமரா போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது.

Samsung Galaxy F23 5G

Samsung Galaxy F23 5G with 50MP camera and Android 12 launched, price  starts at Rs 17,499 - Times of India

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி கேமரா (Samsung Galaxy F23 5G camera) இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட டிரிப்பிள் ரியர் அமைப்பு உள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகிய மூன்று கேமராக்கள் அடங்கும்.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் அடிப்படையில் ஒன் யுஐ 4 (One UI 4) ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்ட்ராய்டு 14 வரையிலான அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி (Snapdragon 750G) சிப், இரண்டு கோர்டெக்ஸ்-ஏ77 சிபியு கோர்கள் 2.2ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் ஆறு கார்டெக்ஸ் ஏ55 சிபியு கோர்கள் 1.8ஜிகாஹெர்ட்ஸ், அட்ரினோ 619 கிராபிக்ஸ் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.15,999ஆக உள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ரூ.14,999க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. மேலும், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

Poco M4 Pro 5G

Poco M4 Pro 5G Price in India, Specifications, Comparison (25th September  2022)

Poco M4 Pro 5G ஸ்மார்ட்போன் 6.6″ அங்குல முழு அளவு எச்டி+ DCI-P3 எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

போக்கோ எம்4 5ஜி செயல்திறனை பொருத்தவரை, 6nm நானோமீட்டரில் கட்டமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி ஜி57 கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி, 6ஜிபி, 8ஜிபி ஆகிய ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் Turbo RAM எனும் மேம்பட்ட வசதியும் உள்ளது. இதன் மூலம், பயன்பாடு இல்லாமல் இருக்கும் உள்ளடக்க மெமரியானது, ரேம் மெமரியின் வேலைகளை செய்யும்.

போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா (poco m4 pro 5g camera) இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டுயல் கேமரா அமைப்புக் கொண்டுள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்புகள், செல்பி மற்றும் முகத்தை கொண்டு போனை திறக்க 16 மெகாபிக்சல் கேமராவை முன்பக்கத்தில் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி விலை (poco m4 pro 5g price in india)

பவர் பிளாக், கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகவும், டாப் வேரியண்டான 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.18,999 ஆகவும் விற்பனை கொண்டு வரப்பட்டுள்ளது.

Moto G62 5G

MOTOROLA G62 5G ( 128 GB Storage, 6 GB RAM ) Online at Best Price On  Flipkart.com

Moto G62 5G ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. அது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும்.

6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.17,999 எனவும் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.19,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

  • 6.5 இன்ச் 120Hz FHD+ IPS LCD டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
  • 8 ஜிபி ரேம்
  • 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • 50 எம்பி குவாட் பிக்சல் டிரிபிள் கேமராக்கள்
  • 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி
  • MyUI உடனான Android 12 ஓஎஸ்

Moto G62 5G கேமரா விமர்சனம் Moto G62 5G கேமரா குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 50MP Quad Pixel முதன்மை லென்ஸ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் உள்ளடக்கியது. இந்த கேமராவானது நைட் மோட், டூயல் கேப்சர், போர்ட்ரெய்ட் மோட் போன்ற பல ஆதரவுகளை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனில் 16MP செல்பி கேமரா இருக்கிறது. Moto G62 5G பேட்டரி விமர்சனம் Moto G62 5G ஸ்மார்ட்போனில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய பேட்டரி தான். ஆனால் இதை சார்ஜ் செய்வதற்கு போதுமான ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இல்லை. இந்த ஸ்மார்ட்போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மட்டுமே இருக்கிறது. எனவே இதன் மூலம் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணிநேரம் ஆகும். அதேபோல் இதில் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் நீடித்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீட்டுள்ள புதிய வேலை வாய்ப்பு சம்பளம் ரூ 75,900 வரை  Apply Now Click here

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

WhatsApp Click here
Telegram Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!