Breaking news puthumai pen thittam 2022 புதுமை பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு எப்போது ரூ. 1,000 வழங்கப்படும்

puthumai pen thittam

புதுமை பெண் திட்டம்

puthumai pen thittam தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி வைக்கின்றார்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

puthumai pen thittam
puthumai pen thittam
Name of the Schemeputhumai pen thittam
List of Beneficiaries Girl Students completed 6th to 12th in Tamilnadu Govt and Govt Aided Schools
Scholarship AmountRs. 1000 per month
No. of BeneficiariesAround 6 Lakhs
Mode of Amount transferDirectly to Girls students Bank account
Date of amount creditedEvery Month 7 th
Program Launch Date5.09.2022

இதில் சுமார் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள். மாணவிகள் ஒவ்வொரு மாதம் செப்டம்பர் 7ம் தேதி ரூ.ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

puthumai pen thittam இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதில் மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றனரா என்பதை ஒவ்வொரு ஆறு மாதமும் உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.

puthumai pen thittam Scheme Info

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்
  • குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்
  • பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமைமைய ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்
  • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
  • இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்
puthumai pen thittam
puthumai pen thittam

puthumai pen thittam Eligibility

  • மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வராக இருக்க வேண்டும்.
  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்
  • அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
  • மாணவிகள் 8 (அ) 10 (அ),12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். (சான்றிதழ் Certificate course), பட்டயம் (Diploma/IT, D.Ted,,Courses) இளங்கலை பட்டம் (Bachelors’ Degree) (B.A, B.Sc, B.Com, BBA, BCA and All Arts and Science, Fine Arts Course) தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech, MBBS, B.D.S, B,Sc (agri), B.V.Sc, B.Fsc, B.L etc) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy, etc போன்றவை)
  • தொலைத்தூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,
  • தொழிற்கல்வியை பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து  ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  • 2021-2022ஆம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலை படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
  • இத்திட்டத்தன் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.

puthumai pen thittam Help line Number

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்த தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்கள் கட்டணமில்லா தொைலபேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

puthumai pen thittam
puthumai pen thittam

puthumai pen thittam Registration link

இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும் இளங்கலை / தொழிற்கல்வி / மருத்து கல்வியில் இரண்டாம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்ட https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பம் பெறப்படும்.

TNPSC GROUP 4 RESULT DATE AND CUT OFF MARKS

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

puthumai pen thittam latest news

WhatsAppClick here
TelegramClick here

The Department of Higher Eduacation under Tamilnadu State Government Started the Moovalur Ramamirtham Scholarship Scheme 2022 under which Rs 1000/- will be given to all the girls who study from 6th Class to 12th Class. You should know that only those who are studying in Government Schools are eligible to get Scholarship under Moovalur Ramamirtham Scheme 2022. Secondly, you can do Pen Kalvi Scheme Registration @ Penkalvi.tn.gov.in using your Mobile Number. The Education Minister of Tamil Nadu started the Moovalur Ramamirtham Scholarship 2022 Registration Portal @ penkalvi.tn.gov.in. Here you can find Documents Required for Pen Kalvi Registration Form 2022 and Moovalur Ramamirtham Scholarship Status 2022 Link and the Pen Kalvi Scheme is renamed as puthumai pen thittam

puthumai pen thittam when will amount credited?

Under Puthumai Pen thittam the amount Rs. 1000 will be credited from 7th of every month

puthumai pen thittam Registration link

New Registration for puthumai pen thittam is Enabled Click here to register

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!