சகல பாவங்களையும் போக்கும் சனி மஹாபிரதோஷம் Sani Pradhosam in tamil

Sani Pradhosam in tamil

Sani Pradhosam in tamil  பிரதோஷம் என்றாலே மிகவும் விசேஷமானது. அதிலும் சனிப்பிரதோஷம் என்பது ஐந்து வருட காலம் நாம் பிரதோஷ விரதம் இருந்து வணங்குவதற்கும், ஒரே ஒரு சனிப்பிரதோஷம் விரதம் இருந்து வணங்குவதற்கு சமம்.

இத்தகைய அற்புதமான இந்த நாளில் சிவராத்திரியில் இணைந்து வருவது மேலும் நல்ல பலன்களை தரும் என்பது துளியும் சந்தேகமில்லை. இந்த நாளில் நாம் செய்யும் இந்த வழிபாடும் நம்முடைய அனைத்து இன்னல்களையும் தீர்த்து நிம்மதியான வாழ்க்கையை வாழ வடிவகுக்கும்.

அந்த வழிபாடை எப்படி செய்வது என்பன பற்றிய தகவல்களை ஆன்மீகம் குறித்த பதிவில் இந்த நாம் தெரிந்து கொள்வோம்.

பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கும் முறை இந்த பிரதோஷ காலத்தில் நான் சிவனை வணங்குவது பொதுவான விஷயம். ஆனால் இதே நேரத்தில் நரசிம்மரையும் நாம் வணங்க வேண்டும் என்பது தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவல்.

ஏனெனில் இந்த பிரதோஷ காலமான நாலரை முதல் ஆறு மணி இந்த நேரத்தில் தான் நரசிம்மர் கிரண்ய கசபுவை தன்னுடைய தொடைகளில் போட்டு மார்பை கிழித்து வதம் செய்தார். ஆகவே இந்த நேரம் சிவபெருமானுக்கு எப்படி முக்கியமான காலமோ அதே போல நரசிம்மருக்கும் இது மிக மிக முக்கியமான ஒரு வழிபாட்டு நேரம்.

ஆகையால் இந்த இரண்டு உக்கிர தெய்வங்களுக்கும் உகந்த வழிபாடு நேரமே இந்த பிரதோஷ காலம் தான் என்று சொல்லப்படுகிறது.

Sani Pradhosam in tamil
Sani Pradhosam in tamil

Sani Pradhosam in tamil

சிவபெருமானுக்கும் இந்த பிரதோஷ காலம் என்பது நந்தியின் மேல் அமர்ந்து அவர் கைலாய மலையை சுற்றி வரும் நேரம் என்றும், சிவபெருமான் பார்வதி தேவியுடன் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக ஆனந்த தாண்டவம் ஆடுவதாகவும் அதை அவரின் மகன்கள் நந்தி பகவான் கண்டு ஆனந்தம் அடையும் நேரம் தான் பிரதோஷ காலம் என்றும் சில புராணங்கள் கூறுகிறது.

எதுவாக இருப்பினும் இந்த நேரம் ஆனது சிவபெருமானிடம் நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு அதை உடனே தருவார் என்பது தான் ஐதீகம். எனவே தான் இந்த பிரதோஷ வழிபாடு மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில் நாம் சிவபெருமானை வணங்குவது போல நரசிம்மரை வழிபடுவதும் நமக்கு பெரும் நன்மைகளை தரும். இந்த பிரதோஷ காலத்தில் நாம் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் தயிர் தேன் பன்னீர் வில்வம் சந்தனம் இப்படி அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஏதேனும் ஒன்றை நாம் நிச்சயமாக வாங்கி கொடுக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நரசிம்மருக்கு பானகத்தை வைத்து படைப்பார்கள். சிவபெருமானுக்கு அபிஷேகத்தை செய்து குளிர்விப்பதை போல இவருக்கு பானகத்தை படைத்து குளிர்விப்பார்கள். இந்த நேரத்தில் இவருடைய அபிஷேக அர்ச்சனைகளை தரிசிப்பதை பெரிய பாக்கியம் என்றே சொல்லலாம்.

அது மட்டும் இன்றி சிவபெருமானை இந்த பிரதோஷ காலத்தில் வழிபடுவது என்பது நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கு இடையே அவருடைய அபிஷேகத்தை தரிசிப்பது தான் மிக மிக முக்கியம். இந்தப் பிரதோஷ வழிபாடை நாம் தொடர்ந்து முறையாக செய்வதற்கு மற்றொரு காரணம் உண்டு.

நாம் இறந்த பிறகு நம்முடைய ஆத்மா ஆனது சூரிய மண்டலம் சென்றால் மறுபிறவி இல்லை என்றும், சந்திர மண்டலம் சென்றால் மறுபிறவி உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இந்த பிரதோஷ வழிபாட்டை முறையாக செய்பவர்களுடைய ஆத்மா ஆனது சூரிய மண்டலம் சென்று மறுபிறவி இல்லாமல் இறைவனடி சேரும் என்பது தான் இந்த பிரதோஷ வழிபாடு முக்கிய சாராம்சம்.

இத்தகைய அற்புதமான பலன்களை தரக் கூடிய இந்த நேரத்தில் நாம் செய்யும் இந்த இரண்டு வழிபாடால் இறந்த பிறகு மறுபிறவி இல்லை என்பதுடன் வாழும் இந்த காலத்தில் நம்முடைய கடன் எதிரிகள் பிரச்சனை அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நோய் நொடி இல்லாமல் நல்ல செல்வ செழிப்புடன் இந்த உலகத்தில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ சிவபெருமான் நமக்கு பரிபூரணமாக அருளும் ஆசியும் தருவார்.

அதே நேரத்தில் நரசிம்மரையும் நினைத்து இந்த வழிபாடையும் செய்யும் பொழுது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி இந்த உலகில் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!