மகளிர் தின வாழ்த்துக்கள் 2023 Top Womens Day Wishes in Tamil 2023 Download Now

Womens Day Wishes in Tamil

Womens Day Wishes in Tamil நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் நம்மை கடந்து போயிருப்பார்கள். அவர்களுள் நமக்கு மிகவும் ஸ்பெஷலாக இருப்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, காதலி, பாட்டி ஆகியோர். இவர்கள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நமக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று பார்த்து பார்த்து கவனிக்கும் அவர்கள் தங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அவர்கள் நமக்காக செய்தவைகளுக்கு அவர்களை பாராட்டும் வகையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் நம்மை கடந்து போயிருப்பார்கள். அவர்களுள் நமக்கு மிகவும் ஸ்பெஷலாக இருப்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, காதலி, பாட்டி ஆகியோர். இவர்கள் இல்லாமல் நம்மால் வாழ்க்கையை வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நமக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று பார்த்து பார்த்து கவனிக்கும் அவர்கள் தங்களை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அவர்கள் நமக்காக செய்தவைகளுக்கு அவர்களை பாராட்டும் வகையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

வாழ்க்கை ஒரு வானவில் என்றால், பெண்கள் அதன் நிறங்கள். எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் (Womens Day Wishes in Tamil)

Womens Day Wishes in Tamil
Womens Day Wishes in Tamil

Womens Day Wishes in Tamil

“நீங்கள் (பெண்கள்) இல்லாமல் இந்த உலகம் இல்லை.

உங்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது”


அழகான பெண், ஆணித்தரமான பெண்
இளமையான பெண், ஈரமான பெண்
உண்ணதமான பெண், ஊமையான பெண்
எச்சரிக்கையான பெண், ஏக்கமான பெண்
ஐயமான பெண், ஒழுக்கமான பெண்
ஓலையில் உள்ள பெண், ஔவையார் போல் பெண்
உயிரெழுத்தை போல் உயிரை உருவாக்கும் பெண்
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்


மலரின் மறுபிறப்பாய் அவதரித்து, மணப்பெண்ணாய் அடிவைக்கும் போது…
மாமன், மாமி மனமறிந்து…
கட்டிய மணவாளன் தேவையறிந்து…
பெற்ற மழலையின் நலனை முன்னிறுத்தி…
மயக்கும் புன்சிரிப்பில் மதிமயங்கி…
தனக்கென ஏதும் எண்ணாது, மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்
மாதந்தோறும் இடைவிடாது மணக்கும் மலர் அன்றோ பெண்.!
“இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்”


நதியும் பெண்ணாய், நாடும் தாயாய்
நிலவும் குமரியாய், நீல்கடலும் அவளாய்
மொழிகளில் நீயாய், முப்பெரும் தேவியாய்
பூக்களுக்கும் பெயராய், பூமியும் இவளாய்
மகளிர் தினம் மட்டுமல்ல, மானுடம் உள்ளமட்டும்
வாழ்த்துகின்றோம் பெண்ணே உன்னை!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


சிரிக்கிறாள் என்பதற்காக பெண்ணை ச்சீ என்காதீர்கள்
மொறைக்கிறாள் என்பதற்காக அவளை மோசக்காரி என்காதீர்கள்
ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு அன்னை தெரசா ஒரு கிளியோபாட்ரா
இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள்..!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


Womens Day Wishes in Tamil

தென்னை எத்தனை உயரம் வளர்ந்தாலும் அது ஒரு புல் இனமே,
பெண்மை எத்தனை கடினமானவள் என்றாலும் அவள் ஒரு பூ இனமே,
கண்ணாக மதிக்கப்பட வேண்டிய பெண்மையை போற்றுவோம்!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


அழகு என்றால் அவள்! பிறப்பின் பிறப்பிடம் அவள்!
பிறப்பில் பெண்ணாக பிறந்து! வளர்ப்பில் தோழியாக மலர்ந்து!
பின் மனைவி என்னும் புனைபெயர் கொண்டு இறுதியில்
வாழும் கடவுளாக நிகழ்வில் “அம்மா” என்னும் சிறப்பு பெயர்
பெறும் என் இனியவர்களுக்கு
என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!


சொந்தங்களைப் பிரிந்து, கைபிடித்த காரணத்தால்
உலகின் கடைசி வரைகூட வரும் என் மனைவி
தேவதையாய் எப்போதும் என்னுடனேயே இருக்கிறாள்…
என்னவளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!


மகிழ்வான எந்த தருணமும், எந்த குடும்பமும், எந்த மனமும், எந்த உணர்வுகளும் நீங்களின்றி முழுமையடைய முடியாது. உங்களால் மட்டுமே இவ்வுலகை முழுமையடைய செய்ய முடியும்.
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரி.


Womens Day Wishes in Tamil
Womens Day Wishes in Tamil

இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்


நீங்கள் செய்யும் சிறிய உதவியும் கூட என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு என் மனமார்ந்த சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.


பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


வணக்கம் பெண்ணே
மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


எந்த சூழலிலும் கடுமையாக மட்டும் விட்டுக் கொடுக்காமல் உழைப்பது எப்போதும் வெற்றியை பரிசளிக்கும். அத்தகைய உழைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


அன்புள்ள அன்னையே நான் வேண்டிய போதெல்லாம் நீங்கள் அங்கு இருந்துள்ளீர்கள். எப்போதும் என்னை வழிநடத்தி சரியான பாதையை காட்டுகிறீர்கள். என் அன்பான இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


அன்பான தாயே நீங்கள்தான் எனக்கு உத்வேகமூட்டி. என்னால் முடிந்த அளவு சிறந்தவற்றை செய்ய என்னை எப்போதும் உந்துகிறீர்கள். என்னுடைய உறுதியான ஆதரவாக இருப்பதற்கு மிக்க நன்றி. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


அழகான பெண், சிறந்த தோழி மற்றும் அற்புதமான தாய். இவையாவும் மற்றும் இதற்கு மேலும் நீங்கள் எனக்கு. உங்களைப் போன்ற அன்னையை பெற்றதற்கு பெருமையாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணருகிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா.


தாய்மைக்கு ஈடு என்று,
எதுவும் இல்லை இவ்வுலகில்.
தாய்மையை போற்றுவோம்.
பெண்மையை மதிப்போம்…!
மகளிர் தின வாழ்த்துக்கள்

Womens Day Wishes in Tamil
Womens Day Wishes in Tamil

 

Womens Day Wishes in Tamil International women’s day 2023 is almost here! The theme of this year is Embrace Equity. Many may believe that it’s good to have equity, however, it is important to note that it is a must-have. For a society to grow, we will have to have an increased focus on gender equity. But before you confuse the two terms, equity and equality, here it is. Equal opportunities are not enough, being inclusive is what’s needed – gender equity isn’t limited to fighting for their rights. They need allies to really advance across fields.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!