[இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்] தனியார் பள்ளிகளில் இலவச கல்வி, ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? Tamilnadu RTE Admission 2023

Tamilnadu RTE Admission 2023

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை (RTE) சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆன்லைனில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Tamilnadu RTE Admission 2023 Highlights

Name of Program RTE Tamil Nadu (Right to Education)
Name of Department The Directorate of Education, Tamil Nadu
Category of Article Admission/ Apply Online/ School List/ Eligibility
Session 2023-24
Benefit of Program To provide 25% reservation in private school
Admission for Primary Classes
Official Website rte.tnschools.gov.in/tamil-nadu
Starting Date 20.04.2023
Last Date 18.05.2023

 

Tamilnadu RTE Admission 2023
Tamilnadu RTE Admission 2023

பொருளாதாரத்தில் பின்தங்கிய

கல்வி உரிமைச் சட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்க வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் தங்கள் நுழைவு நிலையில் (எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு) 25% இடங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு 8,000 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் RTE ஒதுக்கீட்டில் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

இந்தநிலையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 18 ஆகும். விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான http://rte.tnschools.gov.in/ மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கைக்கு ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் மே 21 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். பள்ளிகளில் உள்ள இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 23 ஆம் தேதி லாட் (குலுக்கல்) முறை நடத்தப்படும். மே 24 ஆம் தேதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். மாணவர்கள் மே 29 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் சேர வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு விண்ணப்பிக்கலாம்?

ஆன்லைனில் விண்ணப்பிப்பது தவிர, பெற்றோர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் குடியிருப்புச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’சிறுபான்மையினருக்கு சொந்தமில்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றால் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் முறையாக பதிவிட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!