TN Aaavin Recruitment 2023
TN Aaavin Recruitment 2023 ஆவின் நிறுவனத்தில் காலியாக மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும் என பால்வளத்துறை ஆணையர் அறிவிப்பு
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என ஆவின் அறிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை, சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் மற்றும் திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றில் 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
மேலாளர்கள் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் துணை மேலாளர்கள் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர்கள் (குளிர்பதனம் மற்றும் கொதிகலன்), இளநிலைப் பொறியாளர்கள், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
பணி விவரம்:
மேலாளர், துணைமேலாளர், செயல் அலுவலர், ஜூனியர் செயல் அலுவலர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
மொத்த பணியிடங்கள் : 322

கல்வித் தகுதி:
துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிகளுக்கு துறை சார்ந்து அதற்கேற்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
சீனியர் கிரேட் மற்றும் அரசு விதிகளின் படி, மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டதாகவும், அதை தொடர்ந்து முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்புகள் வரும். https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx – என்ற இணைப்பை ஃபாலோ செய்யலாம்.
அறிவிப்பின் விவரம் – https://drive.google.com/file/d/1AIz-dzwkspSJmlKkxdeAZC1WJxWpYAKo/preview