பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு இயங்குகிறது.
ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.

ஆகஸ்ட் 3
தமிழ்நாட்டில் தலைவர்கள் தினம், விசேஷ பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 9
அதேபோல் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.