தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.
ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
பள்ளிகள் துவங்கிய உடன் அடுத்த வாரமே மழை காரணமாக இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி
மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு இயங்குகிறது.
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிமய மாதா பேராலயத்தின் தேர் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி புனித பனிமய மாதா பேராலயத் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16வது தங்க தேர் பவனி நடைபெறவுள்ளதால, உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.