சென்னையில் நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர், வட பழனி, நீலாங்கரை, திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. காற்றுடன் கூடிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜாப்பேட்டைஉள்பட பல்வேறு பகுதிகளில் லேசான இடியுடன் பரவலாக மழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மிகவும் குளிர்ந்த சூழல் நிலவியது. ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு
இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான, கனமழை பொழுந்துள்ளது பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்