TN ration card aadhaar link last date
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு
TN ration card aadhaar link last date தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற ரேஷன் பொருட்களை வாங்கவும், அரசின் பிற சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்நிலையில், ரேஷன் கார்டு பற்றி தற்பொழுது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், போலியான முகவரிகளை கொண்டு ஒருநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வாங்கி உள்ளனர். இதன் மூலம் அரசின் பல்வேறு சலுகைகளை ஒருநபரே பலமுறை பெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
TN ration card aadhaar link last date
இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை உள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இணைக்காத குடும்ப அட்டைதாரர்கள் கால அவகாசம் முடிவதற்குள் இணைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN ration card aadhaar link last date ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?
* முதலில் நீங்கள் UIDAI இணையதளமான uidai.gov.in க்குச் செல்லவும்.
* இப்போது ‘ஸ்டார்ட் நவ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் பெயர் உட்பட உங்கள் முகவரியை நிரப்பவும்.
* பின்னர் “ரேஷன் கார்டு நன்மை” விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
* அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP கிடைக்கும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, திரையில் செயல்முறை நிறைவு செய்தியைப் பெறுவீர்கள்.
* இப்போது உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு அது உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்படும்.
ஆஃப்லைனில் இணைப்பது எப்படி? TN ration card aadhaar link last date
ரேஷன் கார்டை ஆதார் ஆஃப்லைனுடன் இணைக்க, தேவையான ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் ரேஷன் கார்டுதாரரின் ஆதார் நகல், ரேஷன் கார்டின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை அடங்கும். உங்கள் ஆதாரின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பு ரேஷன் கார்டு மையத்திலும் செய்யப்படலாம்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |