தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை நாட்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு, செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11, 12 ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படுகின்றன.
தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது?
2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.