தமிழக பள்ளிகளுக்கு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN Schools Exam Schedule 2023

TN Schools Exam Schedule 2023

TN Schools Exam Schedule 2023 கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு ஆண்டுக்கான (2023-2024) வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த கல்வி ஆண்டில்  அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி தேர்வு கால அட்டவணையை தற்போது முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ் வெளியிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  • உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  • 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரை நடைபெறும்.
TN Schools Exam Schedule 2023
TN Schools Exam Schedule 2023TN Schools Exam Schedule 2023

சென்னை:

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதற்கான உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரையும், அரையாண்டுத் தேர்வுகள் டிச.11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்புக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்படும்.

இது தவிர 12, 11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான அலகு மற்றும் திருப்புதல் தேர்வுக்கான, 6 முதல் 9-ம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இதைப் பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Click here to download Pdf – Exam Schedule

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!