TN Schools Reopening 2023 Update
TN Schools Reopening 2023 Update கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து ஜூன் 5ஆம் தேதி திங்கள் கிழமை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என பிரிக்கப்பட்டு தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் 3 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளியில் 2½ லட்சம் ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஏப்ரல் மாதம், இறுதி வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டன.
செய்தியாளர்கள் கேள்வி
தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து ஏப்ரல் இறுதியில் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 6 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கடந்த மாத இறுதியில் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை கோடை வெயில் தாக்கம் காரணமாக திறக்க வேண்டுமா என்பதை அந்த நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
100 டிகிரிக்கும் மேல்
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானது. சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் ஈரப்பதத்தை இழுத்துக்கொண்டாலேயே இங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்ப அழுத்தம் காரணமாக பலரும் உடல் நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வானிலை ஆய்வாளர்களும் மருத்துவர்களும் பகலில் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
ஆனால் கோடை வெயில் கடந்த காலங்களை விட இந்த வருடம் கடுமையாக தாக்கி வருகிறது. வெப்ப காற்று வீசுகிறது. வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் உக்கிரகம் இன்னும் குறையவில்லை. 100 டிகிரிக்கு மேலாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று மாணவர்-பெற்றோர் நல சங்கமும் ஆசிரியர் கூட்டணியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் மாநிலத்தில் மே 20 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மே 21 முதல் ஜூன் 10 வரையும், மத்திய பிரதேசத்தில் மே 1 முதல் ஜூன் 15 வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 107 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனல் காற்றுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். எனவே மாணவர்களின் நலன் கருதி வெயிலின் அளவு குறையும் வரை ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். தலைமை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை செயலாளருடன் நடந்த ஆலோசனையில் கடந்த 5 வருடங்களில் பள்ளிகள் எந்தெந்த தேதிகளில் திறக்கப்பட்டது, வெயிலின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வானிலை ஆய்வு மையத்திலும் முழு விவரங்கள் கேட்கப்பட்டன. வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதா? இதே நிலைதான் நீடிக்குமா என்பது பற்றியும் விரிவான தகவல் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்விதுறை அதிகாரிகள் கூறுகையில், ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே இலவச பாடப் புத்தகம், சீருடை போன்றவை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வெயில் தாக்கத்தால் பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்படுவது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து முடிவு எடுக்க கூடியது. அவர்கள் மட்டத்தில் ஆலோசித்து வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய அறிவிப்பு அரசு வெயிடும் என்றனர். புதுச்சேரியில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது. கோடை வெப்பத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அது போல தமிழகத்திலும் ஒத்தி வைக்கப்படலாம் என தெரிகிறது. ஓரிரு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Class 1 to 12 reopen 2023 june 15 open irundha good
No madam it is changed