TN Schools Reopen Extended
வெயிலின் தாக்கம்
ஜூன் 15
தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் கோடை வெயிலானது 100 டிகிரிக்கு மேல் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன், இந்த அதிகபட்ச வெயிலின் தாக்கமானது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை மற்றும் உடல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக, மேலும் ஒரு வாரம் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
கோடை வெயில்:
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்தான் தமிழ்நாட்டில் வெயில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்பார்க்காத அளவிற்கு வெயில் உச்சம் அடைந்து உள்ளது. தினசரி வெப்பநிலை முதல்நாளை விட அதிகமாக உள்ளது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில்
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் பகல் நேரங்களில் 43 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை கூட பல இடங்களில் நிலவுகிறது. இந்த நிலையில்தான் வெப்பநிலை குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கண்டிப்பாக பள்ளி திறப்பை தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. (TN Schools Reopen Extended)
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை நிர்வாகிகளுடன் பள்ளி திறப்பு தள்ளி வைப்பது குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். இதனையடுத்து, பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு முக்கிய தேதிகளை தேர்வு செய்திருப்பதாகவும் முதல்வரின் அறிவிப்பின்படி அந்த இரண்டு தேதிகளில் ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாகவும் அன்பின் மகேஷ் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், பள்ளி திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கூடிய விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.