TN Schools Reopen Special Instructions
TN Schools Reopen Special Instructions கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

சிறப்பு அறிவிப்பு
இன்னும் 4 நாட்களே உள்ளதால் பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக வெளியூர் சென்றிருந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாகவும், வார இறுதி நாள் என்பதாலும் நேற்று (ஜூன் 2) முதல் (ஜூன் 4) வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதியில் இருந்து 1,300 பேருந்துகளும், சென்னையில் இருந்து 900 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கையால் கூட்ட நெரிசலில் சிக்காமல் சொகுசாக பயணம் செய்வதால் பயணிகள் பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கல்வி உபகரணங்கள்
மேலும் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு 11 பொருட்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்க உள்ளதாகவும், இதற்கான இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.