TNHRCE Mutharamman Temple Recruitment 2023 Updates
TNHRCE Mutharamman Temple Recruitment 2023 Updates முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த பணியிடங்கள், விண்ணப்பிக்க தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன. என்னென்ன தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி, ஓதுவார், உதவி பரிசாரகர், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு, மின் பணியாளர், அலுவலக உதவியாளர்
என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி:
- அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
- மின் பணியாளர் பணியிடத்திற்கு ஐடிஐ அல்லது அரசால் அங்கீகரிக்கபட்ட நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருத்தல் அல்லது மின் வாரியத்தால் வழங்கப்பட்ட உரிமம் பெற்றிருத்தல் ஆகியவை இருக்க வேண்டும்.
- அதேபோல், அர்ச்சகர், தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பணியிடத்திற்கான தகுதி விவரங்களை https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் :
- அலுவலக உதவியாளர் மற்றும் மின் பணியாளர் பணியிடத்திற்கு ரூ.12,600 முதல் 39,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
- அதேபோல் நாதஸ்வரம் கலைஞர் பணியிடத்திற்கு 15,300 முதல் 48, 700 வரையும்
- அர்ச்சகர் பணியிடத்திற்கு 11,600 முதல் 36,800 வரையும் சம்பளமாக கொடுக்கப்படும்.
- சம்பளம் பற்றிய முழு விவரங்களும் அறிவிப்பாணையில் இடம் பெற்றுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
11.08.2023
எப்படி விண்ணப்பிப்பது?:
தபால் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள் தரும் முத்தாரம்மன் என்ற பக்கத்தில் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘ செயல் அலுவலர், அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 11.08.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தில் கோரப்பட்ட விவரங்களை சமர்பிக்காவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
Application Link
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |