தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) சேலம் மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர் (Block Resource Person) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 23.08.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Organisation Name | Tamil Nadu State Rural Livelihoods Mission |
Job Category | Tamilnadu Govt Jobs |
Job Location | Anywhere in India |
Vacancies | 20 Vacancies |
Starting Date of Application | 18.08.2023 |
Last Date of Submitting Application | 23.08.2023 |
Application Mode | Offline |

வட்டார வள பயிற்றுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 20
கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 3-5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.07.2023 அன்று 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட முகவரியில் நேரில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
முகவரி: இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/08/2023081725.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.