மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பயனர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு கருவிகளை (safety tools) அறிமுகப்படுத்துகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
WABetaInfo-ன் சமீபத்திய அறிக்கை படி, டெவலப்பர்கள் புதிய ‘பாதுகாப்புக் கருவிகளை’ சோதனை செய்து வருவதாக கூறியுள்ளது. தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து தெரிவிக்க இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் contact list-ல் இல்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் குறித்து தெரிவிக்க இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சமயங்களில் safety tools அம்சம்
பாப்-அப் செய்யப்படும். தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ் அல்லது அழைப்புகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கும்.
ப்ளாக் செய்வது, ரிப்போட் செய்வது மற்றும் ப்ரொபைல் படம், போன் நம்பர், country code ஆகியவை சரிபார்த்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறது.
மேலும் இதோடு ஒரு அம்சம் அறிமுகப்படுத்துகிறது. தெரியாத நம்பரில் இருந்து மெசேஜ்-களை பயனர் படித்தார்களா? என்பதை தெரிந்து கொள்வதை இந்த அம்சம் தடுக்கிறது. நீங்கள் ரிப்ளை செய்தால் அல்லது contact list-ல் சேர்த்தால் மட்டுமே அவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.