5g Mobile Under 10000
5g Mobile Under 10000 ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் 4ஜி மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோன் 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். அதாவது இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது வரும் தீபாவளி அல்லது புத்தாண்டில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜியோபோன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது ட்விட்டர் பயனர் ஒருவர் இந்த ஜியோபோன் 5ஜி-இன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ போன் 5ஜி-இன் பின்புறம் பிளாஸ்டிக் பேனல் உள்ளது. அதேபோல் இந்த போனின் பின்புறம் மையத்தில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது.

5g Mobile Under 10000 இதுதவிர வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெரிய டிஸ்பிளே அசத்தலான கேமராக்கள் மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும். பின்பு ஆன்லைனில் கசிந்த ஜியோபோன் 5ஜி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் இந்த ஜியோபோன் 5ஜி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த 5ஜி போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய டிஸ்பிளேவுடன் இந்த 5ஜி போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஜியோ போன் 5ஜி ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஜியோ போன் 5ஜி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி அல்லது 8எம்பி கேமரா இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ஜியோ போன் 5ஜி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இதில் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜ் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஜியோ போன் 5ஜி அறிமுகாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஜியோ போன் 5ஜி மாடல் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஜியோபோன் 5ஜி மாடல். மேலும் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |