Jio bharat Phone details in tamil
ஜியோ அறிமுகப்படுத்துள்ள குறைந்த விலை ஸ்மார்ட் போன்
Jio bharat Phone details in tamil டெலிகாம் துறையில் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்த ஜியோ நிறுவனம், அனைத்து தரப்பினரும் இணையத்தை எளிதாகவும், அதிகமாகவும் பயன்படுத்தும் வகையில் ஆஃபர்களை வெளியிட்டது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
தற்போதும் மற்ற எந்தவொரு டெலி காம் நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தையே வாடிக்கையாளர்களிடம் வசூலித்து, இந்த துறையில் முடி சூடா மன்னனாக இருப்பது ஜியோ.
ரூ. 999 க்கு ஸ்மார்ட் போனை சந்தையில் அறிமுகம் செய்து டெலிகாம் துறையில் புதிய புரட்சியை ஜியோ நிறுவனம் இன்று ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரூ. 999-க்கு ஜியோ பாரத் என்ற ஃபோனை ஜியோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக 1 மில்லியன் அதாவது 10 லட்சம் போன்கள் வரும் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.
இன்டர்நெட் சேவையுடன் 4 ஜி தொழில்நுட்பத்தில் வரும் இந்த போன் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் 30 சதவீதம் குறைவான மாத கட்டணத்தையே வசூலிக்கிறது.
Jio bharat Phone details in tamil
முதற்கட்டமாக 10 லட்சம் ஜியோ பாரத் போன்கள் 7 ஆம் தேதிக்கு விற்பனைக்கு வரவுள்ளது. பேசிக் ப்ளான் இந்த ஜியோ பாரத் போனில் அட்டகாசமாக உள்ளது. சாதாரணமாக மற்ற நிறுவனங்கள் மாதந்தோறும் பேசிக் ப்ளானுக்கு ரூ. 179 வசூலிக்கின்றன.
இதில் மாதம் 2 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஜியோ பாரத்திற்கு ரூ.123 பேசிக் ப்ளான் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாதம் 14 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இயர்லி ப்ளான் அடிப்படையில் ஜியோ பாரத்திற்கு ரூ. 1234 ஆகவும் 168 ஜிபி டேட்டாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற டெலிகாம் ஆப்பரேட்டர்கள் ஆண்டுக்கு ரூ. 1799 தொகையை பெற்றுக் கொண்டு இலவச கால் மற்றும் மொத்தமே 24 ஜிபி டேட்டாவை வழங்குகின்றனர்.
மற்ற நிறுவனத்தை விடவும் ஜியோ பாரத் போனை பயன்படுத்தும்போது 30 சதவீத செலவை வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்தலாம்.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |