mobile phone blast in tamil
Mobile Tech News WhatsApp Group – Click here
mobile phone blast in tamil தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் ஸ்மார்ட் போன்கள் வெடிக்கும் சம்பவங்களானது அதிகரிக்கிறது
ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது என்பது ஒன்றும் சாதரண காரியமல்ல. இந்த காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் குறைவு என்றாலும், இவை உயிர் கொல்லி என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தொழில்நுட்ப வளர்ந்து வரும் சூழலில், சில இடங்களில் போன் வெடிப்பது தொடர்பான செய்திகளை நம்மால் காண முடிகிறது.
இந்த சூழலில், நம் உடலை ஒட்டிக் கொண்டு ஒட்டுண்ணி போல மாறியிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் வெடிக்கின்றன? அவை வெடிக்காமல் தவிர்க்க என்னென்ன முறைகளை கையாள வேண்டும் என்பதை பயனர்களாகிய நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

போன்கள் ஏன் வெடிக்கின்றன?
பல காரணங்களால் போன்கள் வெடிக்கலாம். ஆனால் மிகவும் பொதுவானது போனின் பேட்டரி ஆகும். நவீன ஸ்மார்ட்போன்களில் லித்தியம்-அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை நேர்மறை மற்றும் எதிர்மறை மின்முனைகளின் துல்லியமான சமநிலையை பராமரித்து, அவற்றை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கின்றன.
பேட்டரிக்குள் இருக்கும் Lithium-Ion கூறுகளில் ஏதேனும் தவறு நடந்தால், அது உடைந்து ஆவியாகும் எதிர்வினையை உருவாக்கலாம். சரியாகக் கையாளப்படாவிட்டால், இந்த எதிர்வினைகள் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
பேட்டரிகள் எவ்வாறு சேதமடைகின்றன?
பல காரணங்களுக்காக பேட்டரிகள் சேதமடையலாம். இதில் மிகவும் பொதுவான பிரச்னை அதிக வெப்பம். சார்ஜ் செய்து கொண்டே போனில் அதிக டாஸ்குகளை ஓட்டுவது, அதிகபடியான நேரம் போன் சூடாகுவதை கண்டுகொள்ளாமல் விளையாடுவது பேட்டரி கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றமானது தீ அல்லது வெடிப்புக்கு வழிவகுக்கும்.
உங்கள் போன் சேதமடைவதற்கான பிற காரணங்கள்
நுகர்வோர் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் வெடிப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். இது ஒவ்வொரு நபரையும் சார்ந்து மாறுபடும். குறிப்பாக தவறான மால்வேர் செயலிகளை பயன்படுத்துவது, நேரடி சூரிய வெளிச்சத்தில் போனை வைத்திருப்பது, ஈரப்பதம் இருக்கும் இடத்தில் அதிக நேரம் போனை போட்டுச் செல்வது போன்ற காரணங்களினால் ஸ்மார்ட்போன் வெடிக்க வாய்ப்புள்ளது.
சேதமடைந்த ஸ்மார்ட்போன் கூட சில நேரங்களில் தனது மூல கூறுகளை சரியாக இயங்கவிடாமல் தடுத்து விடும். சில நேரங்களில் அதிக நாள்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன்கள் கூட இதே வேலையைக் காட்டலாம். இது உற்பத்தியாளரின் பிரச்னையாகக் கூட இருக்கலாம். எனினும், போன் எடை மற்றும் வடிவமைப்பில் மாறுதல் தென்பட்டால் உடனடியாக சேவை மையத்தை அணுகுவது சிறந்ததாக இருக்கும்.
மொபைல் போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? – Click here
போன் வெடிக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து கொள்வது எப்படி?
முதலில் போன் வரம்பை மீறி சூடாகிறதா. அப்படி என்றால் போன் டாக்டரிடம் உடனே எடுத்துச் செல்லுங்கள். இது தவிர போனின் பாகங்களில் எதேனும் கீறல்கள் அல்லது சத்தத்தினை நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உடனடியாக இதற்கு தீர்வை காண்பது நல்லது. முக்கியமாக பின்பக்கம் வீங்கியது போல தெரிந்தால் உடனடியாக சேவை மையத்தை அணுகுவது மிகமிக நல்லது.

போன் வெடிப்பதை தடுக்க முடியுமா?
உற்பத்திக் குறைபாடாகவோ அல்லது இயற்கையாகவே சிக்கல்கள் இருந்தால் பயனர்கள் எதுவும் செய்ய முடியாது. அவ்வாறு இல்லையென்றால், பேட்டரியில் நீங்கள் செலுத்தும் சில சுமைகளைத் தான் இதற்கு காரணமாக அமைகிறதுஉடல் சேதத்தைத் தவிர்க்க போன் கேஸைப் பயன்படுத்துதல், நீங்கள் தூங்கும் இடத்திற்கு அருகில் போனை சார்ஜ் செய்யாமல் இருத்தல், உங்கள் போனை 30-80 விழுக்காடு பேட்டரி ஆயுளுக்கு இடையே சார்ஜ் செய்தல், தரமான சார்ஜிங் அடாப்டர்களை உபயோகித்தல் போன்றவற்றை நீங்கள் கடைபிடிப்பது நல்லதாக இருக்கும். இது உங்களை மட்டுமல்லாது, சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைகள் வெப்பமாவதை எப்படி தவிர்க்க வேண்டும்?
உங்களது ஆப்களை அப்டேட் செய்யுங்கள்
சில ஆப்களில் பழைய சாப்ட்வேர் இருந்தாலோ அல்லது அந்த ஆப்களில் ஏதெனினும் பிழைகள் (Bugs) இருந்தாலோ உங்களது மொபைல்கள் விரைவாக வெப்பமடையும். அதனால் முடிந்தவரை உங்களது ஆப்களை அப்டேட் செய்து வைத்திருங்கள்.
சூரிய ஒளியை தவிருங்கள் :
நேரடியாக சூரிய ஒளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்துவதால், உங்களது மொபைல் எளிதாக வெப்பமடையும். எனவே முடிந்தவரை சூரிய ஒளி உங்கள் மொபைல்கள் மேல் படுவதை தவிருங்கள். நீங்கள் வெளியில் உங்களது மொபைல்களை பயன்படுத்த வேண்டுமானால், நிழலில் வைத்து பயன்படுத்த முயற்சியுங்கள்.
சார்ஜ் போடும் போது கவனம்:
உங்கள் மொபைகளை சார்ஜ் போடும் போது, சோஃபா அல்லது பெட் போன்றவைகள் மேல் வைத்தால், அதன் வெப்பம் வெளியில் செல்லாமல் உங்களது மொபைல் மேலும் வெப்பமடையும். எனவே சார்ஜ் போடும் போது உங்களது மொபைல்களை கடினமான இடத்தில் எளிதில் வெப்பத்தை வெளியேற்றும் பரப்பின் மேல் வைத்து சார்ஜ் போடுங்கள். சில நேரங்களில் உங்களது சார்ஜர் கூட பிரச்சனையாக இருக்கலாம்.
அப்களை க்ளோஸ் செய்யுங்கள் :
நீங்கள் ஒரு ஆப்பை பயன்படுத்தி, அப்படியே ஹோம் பட்டனை அழுத்தினால், அந்த ஆப் பின்னால் செயல்பாட்டிலேயே இருக்கும். எனவே ஒரு ஆப்பை பயன்படுத்தி முடித்துவிட்டால், அதனை ரீசண்ட் ஆப்களில் சென்று க்ளோஸ் செய்வது முக்கியம். நீங்கள் பயன்படுத்தாமல் சில ஆப்கள் இருந்தால், அதனை டெலீட் செய்வதும் நல்லது.

பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது :
உங்களது போனின் பிரைட்னஸ் அளவு கூட மொபைல்கள் வெப்பமாவதற்கு காரணமாக இருக்கலாம். எனவே உங்களது மொபைல்கள் வெப்பமாவதை தவிர்க்க, பிரைட்னஸை குறைவாக பயன்படுத்துவது நல்லது.
ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யுங்கள் :
சில நேரங்களில் உங்களது மொபைல் போன்களில் வைரஸ் இருந்தால் கூட உங்களது மொபைல் போன்கள் வெப்பமடையலாம். ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் உங்களது மொபைல் போன்களில் இருந்தால், உங்களது மொபைல்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும்.
ஏரோபிளேன் மோடை பயன்படுத்துங்கள் :
உங்களது மொபைல்போனை நீங்கள் குறைந்த அளவே பயன்படுத்துபவர் என்றால் நீங்கள் ஏரோபிளேன் மோட் அல்லது பேட்டரி சேவர் மோடிலோ பயன்படுத்தலாம். இது உங்களது மொபைல்களில் திரைமறைவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஆப்கள் செயல்படாமல் தடுக்கும்.
மொபைல்கள் வெப்பமானால் எப்படி குளிர்விப்பது?
உங்களது மொபைல்கள் அடிக்கடி வெப்பமானால், பேட்டரியை அது பாதிக்கும். இதனால் உங்கள் மொபைல்களை நீங்கள் விரைவில் மாற்றும் சூழல் ஏற்படலாம். எனவே உங்கள் மொபைல்கள் வெப்பமானால் நீங்கள் அதனை குளிர்விப்பது அவசியம்.
சூரிய ஒளியில் இருந்து அதை எடுப்பது:
உங்கள் மொபைல் சூரிய ஒளி படுவதால் வெப்பமாகிறது என்றால், அதை உடனடியாக அப்புறப்படுத்துவது நல்லது. அதனை உடனடியாக பிரிட்ஜிலேயோ அல்லது உடனடியாக குளிராக்கும் இடத்திலேயோ வைக்க நினைத்தால் அதுவும் கூட உங்களது மொபைலை பாதிக்கக்கூடும்.
எனவே உங்களது மொபைல் போன் வெப்பமானால், உடனடியாக நிழலிலேயோ அல்லது வெப்பம் இழுக்கக்கூடிய காற்றுபுகும் இடத்திலேயோ வைப்பது நல்லது.
மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்வது :
உங்களின் மொபைல் போன் வெப்பமாக இருந்தால், நீங்கள் உங்களது போனை ஸ்விட்ச் ஆப் செய்யலாம். இது உங்களது அனைத்து ஆஃப்களின் செயல்பாடுகளை நிறுத்தி, உங்கள் மொபைல் போன் குளிர்விக்க உதவும். போனின் வெப்பம் குறைந்த பிறகு, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்து கொள்ளலாம்.
உங்கள் மொபைல் கேஸை நீக்குவது :
உங்களின் மொபைல் வெப்பமானால், வெப்பம் வெளியேற உங்கள் மொபைல் கேஸை கழட்டுவதும் தீர்வாக இருக்கும். உங்களின் ஸ்மார்ட்போன் வெப்பமாக உள்ளது என்று உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்தால், இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
அதிகபட்சம் உங்களது போன் எவ்வளவு சூடாக இருக்க வேண்டும்?
உங்களது போன் அதிகபட்சம் 95 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கலாம். உபயோகப்படுத்தும்போது, 32 முதல் 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 0 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை உங்களது மொபைல் போன் இருக்கலாம். அதற்கு அதிகமாக வெப்பம் இருந்தால், உங்களது மொபைலை குளிர்ச்சியாக்க வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.