TN Govt Transport Recruitment 2023
தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துனர் மற்றும் கம்மியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஓய்வு பெற்ற பணியாளர்களை கொண்டு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓய்வு பெற்றவர்கள் பெரிய அளவில் வரவேற்பு தெரிவிக்கவில்லை என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவர் கூறுகையில், “ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களில் 30 சதவீதம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்படி சென்னை, கும்பகோணம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் 1,000 ஓட்டுநர், நடத்துனர் பணி நியமனம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இரண்டு முன்னணி செய்தித்தாளில் வெளியப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்களை இணைய வழி மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அரசு போக்குவரத்துக் கழக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான நபர்களின் பட்டியலை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Govt Transport Recruitment 2023
Organisation Name | TNSTC |
Name of the Posts | Driver & Conductor |
No. of Vacancies | 1000 |
Starting Date for Apply Online | Available Soon |
Closing Date for Apply Online | Available Soon |
Main Exam Date | Updated Soon |
Download Admit Card | Updated soon |
தகுதி: ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,500 முதல் ரூ.56,200 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலாண்மை இயக்குநர் தலைமையிலான தேர்வுக்குழு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை: தகுதி, வயதுவரம்பு, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகுதித் திறன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
நீண்ட ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெறாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |
I am interested nadathunar post