ரூ 56,200 சம்பளம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலைவாய்ப்பு TN Govt Bus Driver Conductor Jobs 2023

அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர் நடத்துனர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் நடத்துனர்களுக்கு வைக்கப்படும் தேர்வில் 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கும்பகோணம் கோட்டத்துக்கு 174 பேரும் சேலம் கோட்டத்துக்கு 254 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 60 பேரும், மதுரைக்கு 136 பேரும் ,திருநெல்வேலிக்கு 188 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Tamilnadu Govt Bus Driver Jobs 2023 Details

Organisation Name TNSTC
Name of the Posts Driver & Conductor
No. of Vacancies 812
Starting Date for Apply Online Available Soon
Closing Date for Apply Online Available Soon
Main Exam Date Updated Soon
Download Admit Card Updated soon

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தன. இந்த நிலையில் விரைவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு ஆட்கள் சேர்க்கப்படுவார்கள் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். தமிழகத்தில் கும்பகோணம், கோயம்புத்தூர்,சேலம், திருநெல்வேலி ,மதுரை ஆகிய கோட்டங்களில் 1602 காலி பணியிடங்கள் இருந்தன. 1422 பணியிடங்கள் நிரப்ப போக்குவரத்து வாரியம் பரிந்துரை செய்தது.

தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 பேரை தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கும்பகோணம் கோட்டத்திற்கு 174 பேரும், சேலம் கோட்டத்திற்கு 254 பேரும், கோயம்புத்தூருக்கு 60 நபர்களும், மதுரைக்கு 136 நபர்களும், திருநெல்வேலிக்கு 188 நபர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசாணை வெளியிட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Govt Bus Driver Conductor Jobs 2023
TN Govt Bus Driver Conductor Jobs 2023

கல்வித் தகுதி

இப்பணிகளுக்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமெனவும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துனர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,500 முதல் ரூ.56,200 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை இயக்குநர் தலைமையிலான தேர்வுக்குழு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை: தகுதி, வயதுவரம்பு, சாதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம், ஓட்டுநர் தகுதித் திறன், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தகுதித் திறன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவில் அறிவிப்பு  வெளியாகும் என தெரிகிறது.

நீண்ட ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெறாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW

கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group
Click here

 

Latest Government Jobs 2023 – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!