when will tnpsc group 4 2023 notification release
when will tnpsc group 4 2023 notification release தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்களை ஆண்டு அட்டவணையாக வெளியிடும்.
அந்தவகையில் அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று இரவு வெளியிட்டிருக்கிறது. அதில் நடப்பாண்டில் அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணையும் இடம் பெற்றுள்ளது.

இதில் குரூப்-2, 2ஏ காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, அதற்கான முதல்நிலை தேர்வு முடிந்த நிலையில், முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சமீபத்தில் வெளியிடப்பட்ட கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடைபெறும் என்றும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.