சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை சுருக்கெழுத்தர் வேலைவாய்ப்பு ; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் CLRI Junior Stenographer Recruitment 2023

CLRI Junior Stenographer Recruitment 2023

சென்னை அடையாறில் உள்ள மத்திய அரசு நிறுவனமான CLRI-யில் இளநிலை சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மூன்று தினங்களே இருப்பதால் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

CLRI Junior Stenographer Recruitment 2023 Highlights

நிறுவனம் சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனம்
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
பதவி

இளநிலை சுருக்கெழுத்தர்

கல்வித் தகுதி

12th

காலியிடங்கள்  05
பணியிடம்  தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 9.09.2023
கடைசி நாள் 8.10.2023
விண்ணப்ப முறை ஆன்லைன்

 

Junior Stenographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

CLRI Junior Stenographer Recruitment 2023
CLRI Junior Stenographer Recruitment 2023

கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அது மட்டுமன்றி Stenography திறன் அவசியம். ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

08.10.2023 அன்றைய தேதிப்படி 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளூம் வயது வரம்பில் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இது குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பாணையில் தெரிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

மத்திய அரசின் பே லெவல் 4-ன் படி சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.25,500 முதல் 81,100 வரை சம்பளமாக கிடைக்கும். எழுத்துத்தேர்வு திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தேர்வுகளுமே சென்னையிலேயே நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் வழியாக தெரிவிக்கப்படும்.

CLRI Junior Stenographer Recruitment 2023
CLRI Junior Stenographer Recruitment 2023

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். https://jsa.clri.org/ இந்த இணையதள முகவரிக்கு சென்று அங்கு கேக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம்: தேர்வுக்கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 8.10.2023 ஆகும். இன்னும் 3 தினங்களே இருப்பதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். தேர்வு அறிவிப்பாணையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் https://clri.org/docs/2022/news/Jr_Steno_Advertisement_No.01-2023_Final.pdf செய்யவும்.

CLRI Official Website Career Page Click Here
CLRI Official Notification PDF Click Here
CLRI Online Application Form Click Here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!