வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில்
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!
சென்னையிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலகத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் மற்றும் 2 காவலர் பணியிடங்களுக்கு சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்காணும் தகுதிகள் உடையவர்கள் கடைசி தேதி 29.08.2023 முடிவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
Notification Details | |
Organization Name: | Employment and Training Commissionerate Chennai |
Job Category: | Tamilnadu Govt Jobs |
Employment Type: | Regular Basis |
Total No of Vacancies: | 08 Office Assistant, Watchman Posts |
Place of Posting: | Chennai |
Starting Date: | 09.08.2023 |
Last Date: | 29.08.2023 |
Apply Mode: | Offline |
காலிப்பணியிட விவரம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்ற 6 காலிப்பணியிடங்கள் மற்றும் காவலராக பணியாற்ற 2 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி எனவும் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலக காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு விண்ணப்பதாரர் சார்ந்த பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 01.07.2023ம் தேதியின்படி, பொதுப்பிரிவினர் 32 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் பிரிவினர் – 34 வயது மிகாமலும், ஆதிதிராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் – 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
குறிப்பு
விண்ணப்பதாரர் உரிய உடற்தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தோடு சேர்த்து மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை 29.08.2023ம் தேதி வரை அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியிலிருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி, பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
விண்ணப்பங்களை பெறவும், சமர்ப்பிக்கவும் வேண்டிய முகவரி
துணை இயக்குநர் (நிர்வாகம்),
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு), எண்,42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை600 032
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.8.2023
அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் Chennai Employment Training Department Job Vacancy செய்யவும்.